கோலியின் அபார‌ ஃபார்ம் - ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் மைக்கேல் வாகன்

Updated: 14 November 2018 15:46 IST

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வரும் நவம்பர் 21ம் தேதி துவங்கவுள்ளது

Michael Vaughan Sends Virat Kohli Warning To Australia Ahead Of Series Down Under
இந்த ஆண்டில் கோலி அடித்த 4 டெஸ்ட் சதங்களில் 3 வெளிநாட்டில் அடிக்கப்பட்டவை.  கோலி ஆஸ்திரேலியாவில் இதுவரை 992 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 சதங்களும் அடங்கும். © Reuters

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வரும் நவம்பர் 21ம் தேதி துவங்கவுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தொடரின் எதிர்பார்ப்புகள் சென்ற தொடரை போல் அல்லாமல் அதிகரித்துள்ளது. 

அதுமட்டுமில்லாமல் இந்திய கேப்டன் விராட் கோலியின் சமீபத்திய ஃபார்ம் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களிடமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே கோலியை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அணி உத்திகளை வகுத்து வரும் வேளையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனின் கருத்து கோலியை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

கோலி ஆஸ்திரேலியாவில் ஜொலிப்பாரா என்ற கேள்விக்கு ஆம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். சமீபத்தில் தான் இந்திய கேப்டன் கோலி ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

30 வயதான கோலி இந்த வருடத்தில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 133.55 சராசரியை வைத்துள்ளார். 2018ன் அதிக ரன்குவிப்பாளரும் அவர்தான். அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் 1063 ரன்களை வெறும் 10 போட்டிகளில் குவித்துள்ளார். இந்த ஆண்டில் அவர் அடித்த 4 டெஸ்ட் சதங்களில் 3 வெளிநாட்டில் அடிக்கப்பட்டவை.  கோலி ஆஸ்திரேலியாவில் இதுவரை 992 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 சதங்களும் அடங்கும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!
Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"
"'A' ஃபார் அனுஷ்கா" - கோலி வெளியிட்ட புகைப்படத்தை ஆராய்ந்த ரசிகர்கள்!
Advertisement