ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனின் திருமண வாழ்க்கை முறிந்தது!

Updated: 13 February 2020 17:31 IST

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் அவருடைய மனைவி கைலி இருவரும் ஏழு வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர்

Michael Clarke And Wife Confirm Divorce After Seven-Year Marriage
தங்களுடைய விவாகரத்தை அறிவிக்க மைக்கேல் கிளார்க் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டார். © Instagram

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் அவருடைய மனைவி கைலி இருவரும் ஏழு வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த ஜோடி மே 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்,இவர்களுக்கு 4 வயதான கெல்ஸி லீ என்ற பெண் குழந்தையும் உள்ளார். "சிறிது காலம் பிரிந்து வாழ்ந்த பிறகு, நாங்கள் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல வேண்டும் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளோம்,” என்று இருவரும் ஜோடியாக ‘தி ஆஸ்திரேலியன்' நாளிதழுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். “ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையுடன், எங்களின் மகளின் வளர்ப்புக்கு பொறுப்பேற்று இருவரும் பரஸ்பரமாக இந்த முடிவு எடுத்துள்ளோம்” என்று கூறினர்.

விவாகரத்துக்கான மதிப்பு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது.

ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தகவல்படி, இந்த ஜோடி ஐந்து மாதங்களுக்கு முன்பே பிரிந்தது. 8 மில்லியன் டாலர் மதிப்புள்ள இடத்துக்கு இடம்பெயர்வதற்கு முன்பு, கிளார்க் வாக்ளூஸில் உள்ள அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

38 வயதான கைலி க்ளார்க், வாக்ளூஸில் உள்ள அந்த வீட்டிலேயே தன் மகளுடன் வசிக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

38 வயதான க்ளார்க், முன்னாள் ரக்பி லீக்கின் சிறந்த லாரி டேலியுடன் இந்த ஆண்டு பிக் ஸ்போர்ட்ஸ் பிரேக் ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் இணையப் போவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த வாரம் ஸ்கை ஸ்போர்ட்ஸ் ரேடியோவில் பிரேக் ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் இணையப் போவதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து அவர் தனது இணை தொகுப்பாளருடன் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

2015 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய க்ளார்க், 2015ம் ஆண்டு அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 28 சதங்கள் உட்பட 8,643 ரன்கள் குவித்துள்ளார். மேலும் அவர், 245 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • மைக்கேல் கிளார்க், கைலி 7 வருட திருமணத்திற்குப் பின் விவாகரத்து
  • கைலி தங்கள் மகளுடன் வாக்ளூஸில் உள்ள வீட்டில் தங்கவுள்ளார்
  • விவாகரத்துக்கு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனின் திருமண வாழ்க்கை முறிந்தது!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனின் திருமண வாழ்க்கை முறிந்தது!
"நியூசிலாந்து மசூதி தாக்குதல் உறைய வைத்தது" - இந்திய கேப்டன் கோலி!
"நியூசிலாந்து மசூதி தாக்குதல் உறைய வைத்தது" - இந்திய கேப்டன் கோலி!
ஒருநாள் போட்டிகளின் தலைசிறந்த வீரர் கோலி - க்ளார்க் புகழாரம்!
ஒருநாள் போட்டிகளின் தலைசிறந்த வீரர் கோலி - க்ளார்க் புகழாரம்!
Advertisement