டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அதிக எடை கொண்ட வீரர் ரக்கீம் கார்ன்வால்!

Updated: 31 August 2019 14:22 IST

133-139 கிலோ எடையுள்ள ஆஸ்திரேலியாவின் வார்விக் ஆம்ஸ்ட்ராங் வைத்திருந்த முந்தைய சாதனையை கார்ன்வால் முறியடித்தார்.

Meet Rahkeem Cornwall, The World
ரக்கீம் கார்ன்வால் தான் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அதிக எடை கொண்ட வீரராக உள்ளார். © Twitter @windiescricket

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முதலாக அறிமுகமாயிருக்கும் மேற்கிந்திய தீவுகளின் வீரர் ரக்கீம் கார்ன்வால் தான் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அதிக எடை கொண்ட வீரராக உள்ளார். அவரின் எடை 140 கிலோ. 133-139 கிலோ எடையுள்ள ஆஸ்திரேலியாவின் வார்விக் ஆம்ஸ்ட்ராங் வைத்திருந்த முந்தைய சாதனையை கார்ன்வால் முறியடித்தார். கார்ன்வால், திறமையால் ஒரு ஸ்பின்னர், சமீபத்திய ஆண்டுகளில் நான்கு நாள் உள்நாட்டு போட்டிகளில் ஆரோக்கியமான சராசரியாக 23.9 என்ற அளவில் 260 க்கும் மேற்பட்ட ஸ்கால்ப்ஸைக் கொண்டுள்ளார். ஆறடி ஆறு அங்குலம் உள்ள கார்ன்வால், பவுஸர்களை வீசுவதில் வல்லவர். மேலும், கார்ன்வால் ஒரு திறமையான கீழ்-வரிசை பேட்ஸ்மேன் ஆவார். 26 வயதான இவர், பந்து வீச கடைசி கட்டத்தில் உதவுவார்.

ரக்கீம் கார்ன்வால், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. இதில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

2016ம் ஆண்டு இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கார்ன்வால் 5 விக்கெட் வீழ்த்தினார். அவர் வீழ்த்திய விக்கெட்டுகளில் விராட் கோலி, ரஹானே மற்றும் புஜாராவும் அடங்குவர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. விக்கெட்டுகள் வீழ்த்துவதில் அதிக கவனம் செலுத்துவோம் என்றார் ஜசன் ஹோல்டர்.

ஆண்டிகுவாவில் இருந்தது போலவே, முதன் இன்னிங்ஸ் இங்கு கடினமாக இருக்கும் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

"முதலில் பேட் செய்வதால், ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டு, எதிரணியினரை தடுக்க அடுத்த யுத்திகளை பயன்படுத்தலாம். கடந்த போட்டியில் இரண்டு பார்னர்ஷிப் இருந்தாலும், இதுபோன்று தான் விளையாடி, டெஸ்ட் போட்டியை வென்றோம்," என்றார் கோலி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் பெற்ற விராட் கோலி!
7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் பெற்ற விராட் கோலி!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அதிக எடை கொண்ட வீரர் ரக்கீம் கார்ன்வால்!
டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அதிக எடை கொண்ட வீரர் ரக்கீம் கார்ன்வால்!
மேற்கிந்திய தீவுகள் Vs இந்தியா 2வது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா?
மேற்கிந்திய தீவுகள் Vs இந்தியா 2வது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் போட்டி எங்கு, எப்போது?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் போட்டி எங்கு, எப்போது?
Advertisement