நீக்கப்பட்ட மெக்குலம்; அணியில் ஏபிடி : ஆர்சிபியின் அதிரடி முடிவுகள்!

Updated: 17 November 2018 12:43 IST

ஆர்சிபி, 10 வீரர்களை அணியிலிருந்து நீக்கியும், 14 வீரர்களை அணியில் தொடர வைப்பதாகவும் அறிவித்தது. அணியிலிருந்து முன்னணி வீரர் பிரெண்டன் மெக்குலம் நீக்கப்பட்டுள்ளார்

Brendon McCullum Sends Message For Royal Challengers Bangalore After He Is Released
2018ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் மெக்குலம் 6 ஆட்டங்களில் 127 ரன்கள் குவித்தார். இதுவரை மெக்குலம் 5 ஐபிஎல் அணிகளுக்காக ஆடியுள்ளார். (File picture) © AFP

ஐபிஎல் தொடரின் 12வது சீஸனுக்கான அணியை எல்லா ஐபிஎல் அணிகளும் அறிவித்து வருகின்றன. 2019 சீஸனுக்கு அணி வீரர்கள் குறித்த விவரங்களை ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) அணி அறிவித்தது. இதில் 10 வீரர்களை அணியிலிருந்து நீக்கியும், 14 வீரர்களை அணியில் தொடர வைப்பதாகவும் அறிவித்தது. அணியிலிருந்து முன்னணி வீரர் பிரெண்டன் மெக்குலம் நீக்கப்பட்டுள்ளார். இது பற்றி ட்விட் செய்துள்ள மெக்குலம்.ஆர்சிபி கேப்டன் மற்றும் அணியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற சீஸன் மறக்க முடியாத சீஸனாக ஆர்சிபியுடன் அமைந்தது என்று ட்விட் செய்துள்ளார்.

ஆர்சிபி இந்திய கேப்டன் விராட் கோலி, தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், கொல்டர் நைல் மற்றும் சவுத்தி ஆகியோரை அணியில் தொடர்வார்கள் என அறிவித்துள்ளது.

நீக்கப்பட்ட வீரர்களின் புகைப்படத்தை ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளது.

2018ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் மெக்குலம் 6 ஆட்டங்களில் 127 ரன்கள் குவித்தார். இதுவரை மெக்குலம் 5 ஐபிஎல் அணிகளுக்காக ஆடியுள்ளார். கடைசியாக டி29 போட்டிகளில் இந்த வருடம் அக்டோபர் 18 அன்று ஆடினார். 356 டி20 போட்டிகளில் ஆடி 7 சதங்கள், 51 அரைசதங்களுடன் 9620 ரன்கள் குவித்துள்ளார்.

அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்கள்:

மன்தீப் சிங், மெக்குலம், க்றிஸ் வோக்ஸ், சர்ஃபராஸ் கான், கோரி ஆண்டர்சன், அன்கித் சவுத்ரி, அனிருதா ஜோஷி, முருகன் அஷ்வின், மனன் வோரா, பவன் தேஷ்பாண்டே

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் பிரண்டன் மெக்கல்லம்!
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் பிரண்டன் மெக்கல்லம்!
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
பிபிஎல் ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராகும் ப்ரெண்டன் மெக்குலம்!
பிபிஎல் ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராகும் ப்ரெண்டன் மெக்குலம்!
சர்ச்சைக்குள்ளான பிக்பேஷ் லீக்கின் மெக்குலம் கேட்ச்!
சர்ச்சைக்குள்ளான பிக்பேஷ் லீக்கின் மெக்குலம் கேட்ச்!
நூற்றாண்டின் கேட்ச்சாக மாறி இருக்க வேண்டிய‌ மெக்குலம் கேட்ச்!
நூற்றாண்டின் கேட்ச்சாக மாறி இருக்க வேண்டிய‌ மெக்குலம் கேட்ச்!
Advertisement