அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் பிரண்டன் மெக்கல்லம்!

Updated: 06 August 2019 15:23 IST

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் நேற்று அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Brendon McCullum Announces Retirement From All Forms Of Cricket
Brendon McCullum Retirement: கிறிஸ் கெய்லுக்குப் பிறகு டி20 போட்டிகளில் 10,000 ரன்களைக் கடக்கும் இரண்டாவது வீரர் ஆவார். © Twitter

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் (Brendon McCullum) நேற்று அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குளோபல் டி20 லீக் கனடா (GT20 Canada) முடிந்தவுடன் இதை மெக்கல்லம் அறிவித்துள்ளார். ஓய்வை அறிவித்த மெக்கல்லம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கனடாவில் GT20 முடிவுக்கு வந்த பிறகு பெருமையுடனும், திருப்தியுடனும் இன்று நான் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிரிந்து விலகுவதை அறிவிக்கிறேன்," என்று மெக்கல்லம் தெரிவித்தார். அவர் விளையாடும் நேரத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கியவர். 37 வயதான மெக்கல்லம் 2015ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியை வழிநடத்தினார். இதில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது நியூசிலாந்து.

"எனது 20 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் நான் சாதித்ததை பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன் - நான் விளையாட்டில் முதன்முதலில் நுழைந்தபோது நான் கனவு கண்டதை விட அதிகமாக - சில மாதங்களாக  கடினமாக இருப்பதை நான் உணர்ந்தேன்"

"நான் விளையாடி வந்த பாதையை, சாதித்த போட்டிகளை பெருமையுடன் திரும்பி பார்க்கிறேன். எந்த கல்லும் என்னை நோக்கி திரும்பவில்லை என்பதை அறிந்து நான் விளையாட்டை விட்டு விலகுகிறேன்," என்றார்.

"இது கடினமான சவாரியாக இருந்தது ஆனால், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டியுள்ளது."

கடந்த சில ஆண்டுகளில் மெக்கல்லம் டி20 போட்டிகளில் விளையாடி வந்தார், அவருடைய கடைசி போட்டியாக டோடண்ட்டோ நேஷ்னஸில் ஆடினார்.

டி 20 கிரிக்கெட்டில் இரண்டாவது மிக வெற்றிகரமான பேட்ஸ்மேன் ஆவார். மேலும், கிறிஸ் கெய்லுக்குப் பிறகு டி20 போட்டிகளில் 10,000 ரன்களைக் கடக்கும் இரண்டாவது வீரர் ஆவார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் பிரண்டன் மெக்கல்லம்!
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் பிரண்டன் மெக்கல்லம்!
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
பிபிஎல் ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராகும் ப்ரெண்டன் மெக்குலம்!
பிபிஎல் ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராகும் ப்ரெண்டன் மெக்குலம்!
சர்ச்சைக்குள்ளான பிக்பேஷ் லீக்கின் மெக்குலம் கேட்ச்!
சர்ச்சைக்குள்ளான பிக்பேஷ் லீக்கின் மெக்குலம் கேட்ச்!
நூற்றாண்டின் கேட்ச்சாக மாறி இருக்க வேண்டிய‌ மெக்குலம் கேட்ச்!
நூற்றாண்டின் கேட்ச்சாக மாறி இருக்க வேண்டிய‌ மெக்குலம் கேட்ச்!
Advertisement