இந்தியாவிற்காக களமிறங்க இருக்கும் மயான்க் அகர்வால் யார்?

Updated: 26 December 2018 10:47 IST

சேவாக்கை போல் அதிரடி ஆட்டத்தை ஆட கூடியவர் மயான்க் அகர்வால்

Mayank Agarwal Player Profile: All You Need To Know About The Attacking Batsman Who Idolises Virender Sehwag
கர்நாடகவை சேர்ந்தவர் இந்த மயான்க் அகர்வால் © File Photo

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் நாளை மெல்போன் எம்சிஜி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நாளை டெஸ்டில் களமிறங்க இருக்கும் அணி விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த கே.எல்.ராகுல், முரளி விஜய் ஆகியோர் நீக்கப்பட்டு அறிமுக வீரராக மயான்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில தொடர்களாக அணியில் இருந்தும் களமிறங்கும் 11 வீரர்கள் உடைய அணியில் இடம் பெறாமல் இருந்தார்.அகர்வால். இப்போது இந்தியாவிற்காக களமிறங்கும் வாய்ப்பு அகர்வாலுக்கு வந்துள்ளது. உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காக விளையாடும் மயான்க் அகர்வால் யார் என்பதை பார்ப்போம்.

1. 27 வயதான மயான்க் அகர்வால், முதல் தர போட்டிகளில் கர்நாடகவிற்காக களமிறங்கி கவனம் ஈர்க்க கூடிய அளவு ரன்கள் குவித்துள்ளார். கர்நாடகாவிற்காக 46 முதல் தர மற்றும் 75 லிஸ்ட் A போட்டிகள் விளையாடி 50+ ஆவரேஜ் வைத்துள்ளார்.மேலும் கடந்த நவம்பர் 2017 இல் தனது முதல் முச்சதம் அடித்தார். அது போக, 111 டி20 போட்டிகளும் விளையாடி உள்ளார்.

2. விண்டீஸ் அணிக்கு எதிரான இந்தியா அணியில் தேர்ந்து எடுக்கப்பட்ட அகர்வாலுக்கு விளையாடும் 11 பேர் அணியில் இடம் கிடைக்க வில்லை. பிரித்வி சா விற்கு ஏற்பட்ட காயம் காரணமாக இப்போது இந்தியா அணிக்காக விளையாடும் வாய்ப்பு மயான்க் அகர்வாலுக்கு கிடைத்துள்ளது.

3. மைசூருக்கு எதிராக நவம்பர் 2013 இல் கர்நாடகாவிற்காக தனது முதல் தர கிரிக்கெட்டை துவங்கினார் மயான்க் அகர்வால். அவரது லிஸ்ட் A அறிமுகம் தமிழ்நாடுக்கு எதிராக பிப்ரவர் 2012 இல் நடந்தது.

4. ஐ.பி.எல் லில் டில்லி , புனே, பெங்களூர்காக விளையாடி உள்ள அகர்வால், இப்போது பஞ்சாப் அணியில் உள்ளார்.

5. அகர்வாலின் விளையாட்டு ஸ்டைல் சச்சின் போன்றோ ராகுல் டிராவிட் போன்றோ கிடையாது. அதிரடியாக விளையாட கூடிய சேவாக் பார்த்து தான் தனது விளையாட்டு ஸ்டைலை செதுக்கியுள்ளார் மயான்க் அகர்வால்.

Comments
ஹைலைட்ஸ்
  • மயான்க் அகர்வால் கர்நாடகவை சேர்ந்தவர்
  • அதிரடி ஆட்டகாரர் சேவாக்கை போல் விளையாட கூடியவர் அகர்வால்
  • நாளை இந்தியாவிற்காக களமிறங்க உள்ளார் அகர்வால்
தொடர்புடைய கட்டுரைகள்
India vs Bangladesh Test:
India vs Bangladesh Test: 'பிங்க்' பால் டெஸ்ட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!
காயம் காரணமாக பங்களாதேஷ் வீரர் 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கம்!
காயம் காரணமாக பங்களாதேஷ் வீரர் 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கம்!
முதல் பகல்-இரவு டெஸ்ட்டை முன்னிட்டு
முதல் பகல்-இரவு டெஸ்ட்டை முன்னிட்டு 'பிங்க்' நிறத்துக்கு மாறிய ஈடன் கார்டன்ஸ்!
இந்திய அணி வீரர்கள் பகல்-இரவு டெஸ்ட்டில் ஆட கொல்கத்தா வந்தனர்!
இந்திய அணி வீரர்கள் பகல்-இரவு டெஸ்ட்டில் ஆட கொல்கத்தா வந்தனர்!
"Man Of The Watch Award" - அஸ்வினுக்கு நெட்ஃபிலிக்ஸ் வழங்கிய விருது!
"Man Of The Watch Award" - அஸ்வினுக்கு நெட்ஃபிலிக்ஸ் வழங்கிய விருது!
Advertisement