"உலகக் கோப்பையின் பேபி சிட்டர் யார் தெரியுமா?"- சேவாக்கை எச்சரித்த ஹெய்டன்!

Updated: 12 February 2019 17:52 IST

ஆஸ்திரேலிய குழந்தைகள் பலர் சேவாக்குடன் இணைந்து நடித்துள்ளனர்.  குழந்தைகளுடன் பேபி சிட்டராக வலம்வருவது போன்று படமாக்கப்பட்டுள்ளது அந்த விளம்பரம்

India vs Australia: Matthew Hayden Takes Pot Shot At Virender Sehwag, War Of Words Begins
மேத்யூ ஹெய்டன், சேவாக்கின் புதிய விளம்பரத்துக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். © Screengrab/YouTube

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் விரேந்தர் சேவாக்கின் விளம்பரத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த டிம் பெய்ன் - ரிஷப் பன்ட் பேபி சிட்டர் உரையாடலை மையமாக வைத்து அந்த விளம்பரம் எடுக்கப்பட்டது. இதனை பார்த்துவிட்டு தனது ட்விட்டில் மேத்யூ ஹெய்டன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், "எச்சரிக்கை விடுக்கிறேன். ஆஸ்திரேலியர்களை வைத்து நகைச்சுவை செய்ய வேண்டாம். சேவாக் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இருவருக்கு நினைவிருக்கிறதா. உலகக் கோப்பையை பேபிசிட்டராக வைத்திருப்பது யார்?" என்று கூறி விமர்சித்துள்ளார்.  ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகள் உலகக் கோப்பை போட்டியின் நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக சேவாக் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக நடித்த விளம்பரம் வைரலானது. பிப்ரவரி 24ம் தேதி துவங்கவுள்ள இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடருக்கான விளம்பரத்தில் சேவாக் நடித்துள்ளார். ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் 2 டி20 போட்டிகளுக்காக இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விளம்பரத்தில் ஆஸ்திரேலிய குழந்தைகள் பலர் சேவாக்குடன் இணைந்து நடித்துள்ளனர்.  குழந்தைகளுடன் பேபி சிட்டராக வலம்வருவது போன்று படமாக்கப்பட்டுள்ளது அந்த விளம்பரம்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் பேபிசிட்டர் ஜோக்குகள் பிரபலமாகின. ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன், இந்திய கீப்பர் ரிஷப் பன்ட்டை "என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள பேபிசிட்டராகிராயா?" என்று வம்பிழுத்தார். பின்னர் ஒரு சந்திப்பில்  பெய்ன்னின் மனைவியுடன் குழந்தைகளை வைத்துக் கொண்டு பன்ட்டின் படம் இணையத்தில் வைரலானது. பேபிசிட்டர் புகைப்படங்கள் இந்திய ஆஸ்திரேலிய தொடரை சுவாரஸ்யமாக்கின.

மேலும் பன்ட்டை பார்த்து ஹரிக்கேன் அணிக்கு பரிந்துரை செய்கிறேன். தோனி வந்துவிட்டால் உனக்கு வேலை இருக்காது என்று சொல்ல அதுவும் சர்ச்சையானது. பிறகு ரோஹித் ஷர்மாவும் பேபிசிட்டருக்கு பன்ட்டை அழைத்தது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • சேவாக்கில் வீடியோவிற்கு ஹெய்டன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்
  • "ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பேபி சிட்டர் தேவை" மேத்யூ ஹெய்டன்
  • ஆஸ்திரேலியர்களை வைத்து நகைச்சுவை செய்ய வேண்டாம்: எச்சரிக்கும் ஹெய்டன்
தொடர்புடைய கட்டுரைகள்
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"கும்ப்ளேவை தேர்வுக்குழு தலைவராக்குங்கள்" - சேவாக்
"கும்ப்ளேவை தேர்வுக்குழு தலைவராக்குங்கள்" - சேவாக்
தன்னைத் தானே கிண்டல் செய்யும் சேவாக்... 8 வருடத்துக்கு முன்பு என்ன நடந்தது?
தன்னைத் தானே கிண்டல் செய்யும் சேவாக்... 8 வருடத்துக்கு முன்பு என்ன நடந்தது?
"ஆழந்த வருத்தத்தை தருகிறது" - சுஷ்மா சுவராஜின் மரணத்துக்கு கிரிக்கெட் வீரர்களின் ட்விட்!
"ஆழந்த வருத்தத்தை தருகிறது" - சுஷ்மா சுவராஜின் மரணத்துக்கு கிரிக்கெட் வீரர்களின் ட்விட்!
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
Advertisement