இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: பும்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ்!

Updated: 24 September 2019 18:05 IST

முதுகு தண்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Jasprit Bumrah Ruled Out Of Test Series vs South Africa, Umesh Yadav Named Replacement
டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். © PTI

அக்டோபர் 2ம் தேதி தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான இந்தியாவின் டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. முதுகு தண்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். உமேஷ் யாதவ் கடைசியாக 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றார். மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது ஜஸ்பிரித் பும்ரா தனித்துவமான வடிவத்தில் இருந்ததால், இந்தியாவுக்கு இந்த செய்தி பெரும் பின்னடைவாக உள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா, ஹாட்ரிக்குடன் சேர்த்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போது சில காலமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய உமேஷ் யாதவ், டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருடன் இணைவார்.

தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது. மற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் புனே மற்றும் ராஞ்சியில் நடக்கவுள்ளது.

3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா, சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின் , ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மன் கில்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“பந்துடன் அச்சுறுத்தலாக இருப்பார் பும்ரா” - கேன் வில்லியம்சன்
“பந்துடன் அச்சுறுத்தலாக இருப்பார் பும்ரா” - கேன் வில்லியம்சன்
டி20 தரவரிசை: அதிரடியான ஆட்டத்துக்கு பின் 2வது இடத்தைப் பிடித்த கே.எல்.ராகுல்!
டி20 தரவரிசை: அதிரடியான ஆட்டத்துக்கு பின் 2வது இடத்தைப் பிடித்த கே.எல்.ராகுல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
பிசிசிஐ ஆண்டு விழா நிகழ்ச்சியில் கோலி பிரகாசமான புன்னகையுடன் காணப்பட்டார்!
பிசிசிஐ ஆண்டு விழா நிகழ்ச்சியில் கோலி பிரகாசமான புன்னகையுடன் காணப்பட்டார்!
Advertisement