காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகினார் கப்தில்!

Updated: 04 February 2019 18:08 IST

மார்டின் கப்திலுக்கு இன்னும் முதுகு வலி குணமாகாததால், டி20 போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

Martin Guptill Out Of New Zealand Side For India T20I Series
கப்தில் பிட்னெஸ் டெஸ்டில் தேர்ச்சி பெறாததால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுள்ளது. © AFP

நியூசிலாந்தின் துவக்க வீரர் மார்டின் கப்தில் முதுகுவலி காரணமாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். நியூசிலாந்து பயிற்சியாளர் காரி ஸ்டெட் கூறும் போது '' கப்தில் பிட்னெஸ் டெஸ்டில் தேர்ச்சி பெறாததால் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும், பங்களாதேஷ் தொடருக்கு முன் தேர்ச்சி பெறுவார் என்றும் கூறினார். அதோடு 3 போட்டிகளும் ஐந்து நாள் இடைவெளியில் நடைபெறுவதால் அதற்குள் கப்தில் தேர்ச்சி பெறுவது கடினம் என்றார். 

அவரை டி20 போட்டிகளில் நிறையவே மிஸ் செய்கிறது நியூசிலாந்து என்று கூறிய அவர், மிகப்பெரிய தொடர்களை கருத்தில் கொண்டு அவரை அடுத்த தொடருக்குள் தேர்ச்சி பெற விரும்புவதாக தெரிவித்தார்.

கப்தில், காயம் காரணமாக ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஆடவிலை. டி20 தொடரில் கப்திலுக்கு பதிலாக ஜிம்மி நீஸம் சேர்க்கப்பட்டுள்ளார்.  

நியூசிலாந்து அணியில் புதுமுக வீரராக டர்யல் மிட்செல் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் முன்னாள் ரக்பி வீரர் ஜான் மிட்செலின் மகனாவார். 

நியூசிலாந்து அணி:

கேன் வில்லியம்சன், ப்ரேஸ்வெல், காலின் டி க்ராண்தோம், பெர்குசன், ஸ்காட் குக்லிஜின், டர்யல் மிட்செல், காலின் முன்ரோ, ஜிம்மி நீஸம், சாண்டனர், டிம் செய்ஃபெர்ட், இஷ் சோதி, டிம் சவுத்தி, ராஸ் டெய்லர்.

Comments
ஹைலைட்ஸ்
  • நியூசிலாந்து 1-4 என்ற கணக்கில் தோல்வியுற்றது
  • கப்தில், முதுகுவலி காரணமாக டி20 தொடரில் இடம்பெறவில்லை
  • டி20 போட்டி பிப்ரவரி 6ம் தேதி துவங்குகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா!
டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
உலகக் கோப்பை ஃபைனல் ஓவர்த்ரோ சர்ச்சை: மீண்டும் ஆய்வு; என்ன நடக்கும்?
'உலகக் கோப்பை ஃபைனல் ஓவர்த்ரோ சர்ச்சை': மீண்டும் ஆய்வு; என்ன நடக்கும்?
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
இந்த உலகக் கோப்பையின் துரதிர்ஷ்டமான விக்கெட் இதுதான்!
இந்த உலகக் கோப்பையின் துரதிர்ஷ்டமான விக்கெட் இதுதான்!
Advertisement