'என் டைம் முடிஞ்சி போச்சு' - 15 ஆண்டுகால கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த மலிங்கா!

Updated: 27 July 2019 17:48 IST

வங்க தேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

Sri Lanka vs Bangladesh: Lasith Malinga Signs Off In Style As Sri Lanka Crush Bangladesh
15 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு விளையாடியுள்ளார் லசித் மலிங்கா. © AFP

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் இலங்கை பவுலர் லசித் மலிங்கா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மலிங்கா கூறியதாவது-

ஓருநாள் போட்டிகிளல் இருந்து நான் ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று கருதுகிறேன். எனது நேரம் முடிந்து விட்டது. இலங்கை அணிக்காக 15 ஆண்டுகளாக விளையாடியுள்ளேன். ஓய்வு பெறுவதற்கு இதுதான் தகுந்த தருணம்.  

இவ்வாறு மலிங்கா கூறினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மலிங்கா 338 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2004-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மலிங்கா சர்வதேச அரங்கில் களம் இறங்கினார். 

கடந்த 2011- ஏப்ரல் மாதம் தான் டெஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார் மலிங்கா. இருப்பினும் அவர் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 314 ரன்களை குவித்தது. அடுத்து விளையாடிய வங்க தேச அணி 223 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தனது கடைசிப் போட்டியில் மலிங்கா 38 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இப்படி ஒரு பந்துவீச்சு முறையா?" - வியப்பில் ஆழ்த்தும் இலங்கை வீரர் #ViralVideo
"இப்படி ஒரு பந்துவீச்சு முறையா?" - வியப்பில் ஆழ்த்தும் இலங்கை வீரர் #ViralVideo
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!
தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் மீண்டும் இடம்பெற்ற லசித் மலிங்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் மீண்டும் இடம்பெற்ற லசித் மலிங்கா!
"பாகிஸ்தானிலும் வந்து விளையாடுங்கள்" - விராட் கோலிக்கு ரசிகரின் வேண்டுகோள்
"பாகிஸ்தானிலும் வந்து விளையாடுங்கள்" - விராட் கோலிக்கு ரசிகரின் வேண்டுகோள்
Advertisement