4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த மலிங்கா!

Updated: 07 September 2019 16:46 IST

கோலின் முன்ரோ, ஹமிஷ் ரூதர்ஃபோட், கோலின் டி க்ராண்தோம் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரை தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கி வெளியேற்றினார் மலிங்கா. இதனால், நியூசிலாந்து அணி மூன்று ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 15 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Lasith Malinga Claims 4 Wickets In 4 Balls In 3rd T20I Against New Zealand - Watch
36 வயதான மலிங்கா தான் டி20 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர். © AFP

லசித் மலிங்கா, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 4 பந்துகளுக்கு 4 விக்கெட் வீழ்த்தினார். போட்டியின் மூன்றாவது ஓவரில் மலிங்கா, கோலின் முன்ரோ, ஹமிஷ் ரூதர்ஃபோட், கோலின் டி க்ராண்தோம் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரை தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கி வெளியேற்றினார். இதனால், நியூசிலாந்து அணி மூன்று ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. 36 வயதான மலிங்கா தான் டி20 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர்.

97 விக்கெட் வீழ்த்தியிருந்த ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை மலிங்கா முறியடித்துள்ளார். தன்னுடைய 76வது போட்டியில் கோலின் முன்ரோவை வீழ்த்தியதன் மூலம் இந்தச் சாதனையை புரிந்துள்ளார்.

மலிங்காவின் சிறப்பான பந்து வீச்சு, நீயூசிலாந்து அணியை 88 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு 126 ரன்கள்.

மலிங்காவின் சிறந்த பந்துவீச்சு, நான்கு ஓவர்களில் 5/6 வீழ்த்தியது. இதில் அவர் 37 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்தத் தொடரில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் இதேபோன்ற சாதனையை நிகழ்த்திய மலிங்கா, தனது டி20 வாழ்க்கையை 104 ஆக உயர்த்தினார்.

மலிங்கா தன்னுடைய முதல் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக 2006ம் ஆண்டு தொடங்கினார்.

30 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 101 விக்கெட்களும், 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 338 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"வேகமாக பந்து வீசுவது எனக்கு இயல்பாகவே வருகிறது" - நவ்தீப் சைனி
"வேகமாக பந்து வீசுவது எனக்கு இயல்பாகவே வருகிறது" - நவ்தீப் சைனி
"கடினமான சூழ்நிலைகளை கையாள இலங்கை வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்" - மலிங்கா
"கடினமான சூழ்நிலைகளை கையாள இலங்கை வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்" - மலிங்கா
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
3rd T20I: ஆடும் லெவனில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன் படைத்த இந்திய சாதனை!
3rd T20I: ஆடும் லெவனில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன் படைத்த இந்திய சாதனை!
INDvSL: 3வது டி20 போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
INDvSL: 3வது டி20 போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
Advertisement