பிசிசிஐ தலைவர் ஆகவிருக்கும் கங்குலிக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து!

Updated: 16 October 2019 10:52 IST

பிடிஐ தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை பிரிஜேஷ் படேலை தொடர்ந்து சவுரவ் கங்குலி புதிய பிசிசிஐ தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sourav Ganguly Congratulated By Mamata Banerjee On Being "Unanimously Elected BCCI President"
கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகித்து வருகிறார். © AFP

பிசிசிஐயின் தலைவராக திங்கள்கிழமை நியமிக்கப்பட்ட பின்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் சவுரவ் கங்குலி அன்பான வாழ்த்துக்களைப் பெற்றார். பிடிஐ தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை பிரிஜேஷ் படேலை தொடர்ந்து சவுரவ் கங்குலி புதிய பிசிசிஐ தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "ஏகமனதாக @BCCI தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு @ SGanguly99 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பதவிக்காலத்திற்கு வாழ்த்துக்கள். நீங்கள் இந்தியாவையும் #பங்களாவையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். CAB தலைவராக நீங்கள் பதவி வகித்ததில் நாங்கள் பெருமிதம் அடைந்தோம். ஒரு புதிய இன்னிங்ஸை எதிர்பார்க்கிறோம்," என்று மம்தா பானர்ஜி ட்விட்டரில் கூறியுள்ளார்.

அக்டோபர் 14 வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். ஆனால் கங்குலியின் நியமனத்திற்கு அனைத்து வேட்பாளர்களும் போட்டியின்றி வெளிவந்ததால் எந்த தேர்தலும் நடத்தப்படாது.

47 வயதாகும் கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும், 2020 செப்டம்பரில் அந்தப் பதவியை விட்டு வெளியேற வேண்டும்.

ஜக்மோகன் டால்மியாவின் மறைவைத் தொடர்ந்து, கங்குலி 2015ம் ஆண்டு CAB தலைவரானார். 2014ல் இணை செயலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் மூன்று ஆண்டுகளாக செயற்குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். 2020 ஜூலை மாதம் கங்குலி தனது ஆறு ஆண்டுகளை அலுவலக பொறுப்பாளராக இருந்து பணியை முடிப்பார்.

இந்த பதவிக்காலம் ஒன்பது மாதங்களுக்கு மட்டுமே இருக்கும் என்று வருத்தப்படவில்லை என்று முன்னாள் இந்திய கேப்டன் திங்களன்று தெரிவித்தார். "ஆம், அதுதான் விதி, நாம்அதைச் சமாளிப்போம்" என்று கங்குலி பிடிஐயிடம் கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
கங்குலியின் நான்கு நாடுகளுக்கு போட்டி யோசனையை பாராட்டிய கிரிக்கெட் ஆஸி. சிஇஓ!
கங்குலியின் நான்கு நாடுகளுக்கு போட்டி யோசனையை பாராட்டிய கிரிக்கெட் ஆஸி. சிஇஓ!
என்சிஏ குறித்த விஷயங்களை விவாதித்த சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட்!
என்சிஏ குறித்த விஷயங்களை விவாதித்த சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட்!
Advertisement