மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights

Updated: 06 April 2019 23:39 IST

ஹைதரபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது

Live IPL Score, SRH vs MI Live Cricket Score: Mumbai Indians Hope To Stop SRH Juggernaut In Hyderabad
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் vs மும்பை இண்டியன்ஸ் போட்டி ஹைதரபாத்தில் நடக்கிறது © AFP

சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தனது கடைசி போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய மும்பை இண்டியன்ஸ் அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற விரும்புவார்கள்.

சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களான டேவிட் வார்னர் – ஜானி பேரிஸ்டோ டாப் பார்ம்மில் இருக்கிறார்கள். அது போக பந்துவீச்சில் முகமது நபி இரண்டு போட்டிகளில் ஆறு விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். அது போக சன்ரைசர்ஸ் அணியில் ரஷித் கான், புவனேஷ்வர் குமார் என டாப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

ரோஹித் சர்மா, பாண்ட்யா என டாப் பேட்ஸ்மேன்கள் எப்படி சன்ரைசர்ஸ் அணியின் டாப் பந்துவீச்சாளர்களை சமாளிப்பவர்கள் என்பதே இன்றைய ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும்.  

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. மும்பை அணியில் மலிங்கா மற்றும் யுவராஜ் சிங் பதிலாக இஷான் கிசான் மற்றும் ஜோசப் விளையாடவுள்ளனர்.

ஸ்கோர்கார்டு தமிழில்

தமிழில் வர்ணனை

வரைபடம் தமிழில்

மும்பை அணி வீரர்கள் ரோஹித் சர்மா, டி காக், சுர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், க்ருணால் பாண்ட்யா விரைவில் அவுட்டாக,  14 ஓவர்களில் 72/5 எடுத்து தடுமாறுகிறது.

20 ஓவர்களில் மும்பை அணி 136/7. போலார்ட் இறுதியில் சிக்சர் மற்றும் பவுண்டரிகள் பறக்க விட்டு 46 ரன்கள் குவித்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு கெளல் இரண்டு விக்கெட்களும் புவனேஷ்வர், சந்தீப், முகமது நபி, ரஷித் கான் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

வார்னர், ஜானி பேர்ஸ்டோ மற்றும் விஜய் சங்கர் விரைவில் அவுட் ஆக, சன்ரைசர்ஸ் அணி 10 ஓவர்களில் 59/3.

ஜோசப் அற்புதமான பந்துவீச்சால் 6 விக்கெட்கள் வீழ்த்த, மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதரபாத் அணி 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
சன்ரைசர்ஸ், மும்பை ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
சன்ரைசர்ஸ், மும்பை ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
Advertisement