ஐ.பி.எல். 2019: அடித்து துவைத்த ஆண்ட்ரே ரஸல்! 5-வது மேட்சிலும் படுத்தது ஆர்.சி.பி.!!

Updated: 06 April 2019 00:16 IST

13 பந்துகளில் 48 ரன்களை ராக்கெட் வேகத்தில் ரஸல் குவித்தார். இதில் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

Live IPL Score, RCB vs KKR Live Cricket Score: Royal Challengers Bangalore Host Kolkata Knight Riders In Quest Of First Win
தொடர்ந்து 5- வது மேட்சிலும் பெங்களூரு தோல்வி அடைந்துள்ளது. © AFP

ஆல் ரவுண்டர் ரஸலின் அதிரடியால் ஆர்.சி.பி.யை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

206 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆட்டத்தை தொடங்கியது கொல்கத்தா. தொடக்க வீரர்கள் லின் 43 ரன்களிலும், சுனில் நரைன் 10 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த உத்தப்பா 33 ரன்களும், ராணா 37 ரன்களும் எடுத்தனர்.

ரன் 153 ஆக இருந்தபோது 19 ரன்களில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். இதையடுத்து வெற்றி பெற 18 பந்துகளில் 53 ரன்கள் தேவையாக இருந்தது.

இதன் பின்னர் காட்டடி அடித்த ரஸல் 13 பந்துகளில் 48 ரன்களை குவித்து 19.1 ஓவரிலேயே அணியை வெற்றி பெற வைத்தார். இதன்படி கடைசி 13 பந்துகளில் கொல்கத்தா 53 ரன்களை எடுத்திருக்கிறது.

ஆட்ட நாயகன் விருது ரஸலுக்கு அளிக்கப்பட்டது. முன்னதாக ஆடிய பெங்களூரு 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 எடுத்தது.49 பந்துகளை சந்தித்த கோலி 84 ரன்களையும், 32 பந்துகளை சந்தித்த டிவில்லியர்ஸ் 63 ரன்களையும் எடுத்தனர்.

ஸ்கோர்கார்டு தமிழில்

தமிழில் வர்ணனை

வரைபடம் தமிழில்
 
ஐ.பி.எல். 2019 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதன் லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்:

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ட்விட்டரில் மீம்ஸ்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முகமது சிராஜ்!
ட்விட்டரில் மீம்ஸ்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முகமது சிராஜ்!
"ஏற்றுக்கொள்ளவே முடியாது" தோல்விக்காக மனம் வருந்திய கேப்டன் கோலி!
"ஏற்றுக்கொள்ளவே முடியாது" தோல்விக்காக மனம் வருந்திய கேப்டன் கோலி!
ரஸல், ஐபிஎல் தொடரின் பாகுபலி என புகழ்ந்த ஷாருக்!
ரஸல், ஐபிஎல் தொடரின் 'பாகுபலி' என புகழ்ந்த ஷாருக்!
ஐபிஎல்லில் அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த கோலி!

Advertisement