"உடல் சொல்வதை கேளுங்கள்" - ரெய்னாவுக்கு அறிவுரை சொன்ன ஜாண்டி ரோட்ஸ்!

Updated: 10 August 2019 13:19 IST

பிசிசிஐ பதிவுக்கு பதிலளித்த தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ், சுரேய் ரெய்னாவுக்கு உருக்கமான செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

"Listen To Your Body My Friend": Jonty Rhodes Message To Suresh Raina After Knee Surgery
சுரேஷ் ரெய்னாவுக்கு 4 வாரம் முதல் 6 வாரம் வரை ஓய்வு தேவைப்படுகிறது. © Twitter

இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு காலில் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 4 வாரம் முதல் 6 வாரம் வரை ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் அவர் அடுத்து இந்தியா ஆடவிருக்கும் போட்டியில் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது. பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டது. பிசிசிஐ பதிவுக்கு பதிலளித்த தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ், சுரேய் ரெய்னாவுக்கு உருக்கமான செய்தி ஒன்றை அனுப்பி அதில், உடல் சொல்வதை கேளுங்கள் என்று கூறி  #aramse என்று பதிவை முடித்தார். பிசிசிஐ சொன்ன தகவல் படி, 32 வயதான சுரேஷ் ரெய்னா, கடைசியாக 2018ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார். அவருக்கு கடந்த சில மாதங்களாக முழங்காலில் வலி இருந்துள்ளது.

"@ImRaina உங்கள் வாழ்க்கையில், குறிப்பாக இந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் நம்பமுடியாத பணி நெறிமுறையுடன் பலருக்கு நீங்கள் ஒரு உத்வேகம் அளித்துள்ளீர்கள். உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள் - உங்களை தெரிந்ததால் சொல்கிறேன். உங்களுக்கு நாளைக்கே பயிற்சி செல்ல வேண்டும் என்று தோன்றும். பொறுமையாக இருங்கள் #aramse," என்று ட்விட் செய்தார் ஜாண்டி ரோட்ஸ்.

ரெய்னா இதுவரை 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 768 மற்றும் 5,615 ரன்கள் குவித்துள்ளார். 78 டி20 போட்டிகளில் ஆடிய ரெய்னா 1605 ரன்கள் குவித்துள்ளார். 

ரெய்னா கடைசியாக, 2019 ஐபிஎல் போட்டிகளில் ஆடினார். அதில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய அவர் 17 போட்டிகளில் இடம்பெற்று 383 ரன்கள் குவித்தார். மேலும், ஐபிஎல் தொடரில் மூன்று அரைசதம் குவித்துள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
"உடல் சொல்வதை கேளுங்கள்" - ரெய்னாவுக்கு அறிவுரை சொன்ன ஜாண்டி ரோட்ஸ்!
"உடல் சொல்வதை கேளுங்கள்" - ரெய்னாவுக்கு அறிவுரை சொன்ன ஜாண்டி ரோட்ஸ்!
சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை!
சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை!
Advertisement