"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!

Updated: 18 October 2019 10:26 IST

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறிய பின்னர் தோனி, கிரிக்கெட்டிலிருந்து இரண்டு மாதங்கள் ஓய்வு பெற்றார்,

Sourav Ganguly To Discuss MS Dhoni
தோனியின் ஓய்வு குறித்து தான் சமீபத்திய காலங்களில் இந்திய கிரிக்கெட்டில் அதிகம் பேசப்பட்ட தலைப்பாக உள்ளது. © AFP

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி, எம்.எஸ்.தோனியின் எதிர்காலம் குறித்த விஷயத்தில் தனது கருத்தை தெரிவிக்கும் முன் தேர்வுக்குழுவினரிடம் பேசுவேன் என்று கூறினார். பங்களாதேஷுக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான இந்தியாவின் டி20 அணி அக்டோபர் 24 ஆம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்படும், அப்போதுதான் கங்குலி தேர்வுக்குழுவினரிடம் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். "24ம் தேதி தேர்வுக்குழுவினரை சந்திக்கும்போது, இதுகுறித்து பேசுவேன். தேர்வுக்குழுவினர் என்ன நினைக்கிறார்கள் என்று நான் தெரிந்துகொள்வேன். அதன்பின் தான் என்னுடைய கருத்தை சொல்ல முடியும்," என்று கங்குலி கூறினார்.

இந்தியா பங்களாதேஷுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் தொடர்களும் நடக்கவுள்ளன.

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறிய பின்னர் தோனி, கிரிக்கெட்டிலிருந்து இரண்டு மாதங்கள் ஓய்வு பெற்றார்.

பின்னர் அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரைத் தவறவிட்டார், மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.

மேலும், தோனி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி 2019ல் இந்தியாவுக்காக டி20 போட்டியை பெங்களூரில் விளையாடினார், .

ஒரு கிரிக்கெட் வீரர் இவ்வளவு நீண்ட இடைவெளி எடுக்க முடியுமா என்று கங்குலியிடம் கேட்கப்பட்டது, இது நடக்கும்போது தான் இந்த இடத்தில் இல்லை என்று பதிலளித்தார். எனவே அவர் எதைப் பற்றியும் கருத்து தெரிவிக்கும் முன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் பேச வேண்டியிருக்கிறது என்றார்.

"நான் எங்கும் இல்லை (அது நடக்கும்போது). எனவே எனது முதல் தேர்வுக் குழு கூட்டம் 24ம் தேதி இருக்கும்." என்றார்.

"தோனி என்ன விரும்புகிறார் என்று பார்ப்போம்" என்று கங்குலி கூறினார்.

தோனியின் ஓய்வு குறித்து தான் சமீபத்திய காலங்களில் இந்திய கிரிக்கெட்டில் அதிகம் பேசப்பட்ட தலைப்பாக உள்ளது. மேலும், அவரது மோசமான ரன் குவிப்பு காரணமாக அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனியின் எதிர்காலம்குறித்து தேர்வுக்குழுவினரிடம் முதலில் பேசுவேன்:கங்குலி
  • தோனி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி 2019 ஆடினார்
  • இந்தியா பங்களாதேஷுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
எம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு
எம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு 'ஸ்னீக் பீக்' வீடியோவை பகிர்ந்த சாக்ஷி!
MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!
MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
Advertisement