''நாம் கேட்டது போதும் இனி இந்தியாவே கேட்கட்டும் '' பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரின் சர்ச்சையான கருத்து

Updated: 12 February 2019 12:43 IST

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், பாகிஸ்தான் வாரியத்துக்கும் இடையேயான கருத்து மோதலில் புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வாசிம் கான் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையாகியுள்ளது.

Lets Make India Want To Play Pakistan, Says Pakistan Cricket Board Managing Director Wasim Khan
"பாகிஸ்தான் தான் இந்தியாவை விளையாட சொல்லி வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. கொஞ்சம் பொறுப்போம் இந்தியா பாகிஸ்தானை அழைக்கும் சூழலை உருவாக்குவோம்" என்று வாசிம் கான் கூறியுள்ளார். © AFP

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், பாகிஸ்தான் வாரியத்துக்கும் இடையேயான கருத்து மோதலில் புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வாசிம் கான் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையாகியுள்ளது. அதில் ''இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் குறித்து எனக்கு நம்பிக்கை வரவில்லை. அதற்கு வேறு வழிகளை தேட வேண்டும். இத்தனை நாட்களாக நாம் போட்டிகள் வேண்டும் என்று கேட்டு வந்தோம். இனி அவர்கள் வந்து கேட்குமளவுக்கு பாகிஸ்தான் நடந்து கொள்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.

"ஆனால் இது ஒரு கடினமான செயல். அது இப்போதைக்கு நடக்கும் என்ற எண்ணமில்லை" என்றார். "அதுவும் இந்தியாவில் பொதுத்தேர்தல் வரவுள்ள சூழலில் இது சாத்தியமா என்பது சந்தேகமே. அதன் பின்பாவது நடக்க வாய்ப்புள்ளதா என பார்க்க வேண்டும். நாங்களும் பல முறை கேட்டுவிட்டோம்" என்று கூறினார். 

"பாகிஸ்தான் தான் இந்தியாவை விளையாட சொல்லி வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. கொஞ்சம் பொறுப்போம் இந்தியா பாகிஸ்தானை அழைக்கும் சூழலை உருவாக்குவோம். இந்தியாவுடன் போட்டிகளில் ஆட வேண்டும் என்பதற்காகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேலைப்பார்த்துக்கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது. அதைவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டை மேம்படுத்துவோம். அதில் கவனம் செலுத்துவோம்" என்றார்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2015 ஆண்டு இருநாட்டு தொடரில் ஆடவில்லை என்பதை முன்னிறுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து பேசிய ஐசிசியின் இஸான் மணி, "பொதுத்தேர்தல் வரை இந்தியாவை எதுவும் சொல்ல முடியாது. அதன்பின் இது குறித்த பேச்சுகள் துவங்கப்படும்" என்றார். 

"நிறைய இந்திய ரசிகர்களிடமிருந்து எனக்கு செய்திகள் வந்துள்ளன. இதில் அரசியல் குறுக்கீடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் முடிந்து எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு முடிவுகள் எட்டப்படும்" என்றார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி நிகழ்ச்சிகள் தவிர இருநாடுகள் போட்டியில் கடைசியாக ஆடியது 2013 என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • "இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதுவது குறித்து எனக்கு நம்பிக்கை வரவில்லை"
  • "இந்தியா பாகிஸ்தானை விளையாட அழைக்கும் சூழலை உருவாக்குவோம்" வாசிம் கான்
  • ஐசிசி நிகழ்ச்சிகள் தவிர இருநாடுகளும் கடைசியாக 2013ம் ஆண்டு விளையாடியது
தொடர்புடைய கட்டுரைகள்
“ரன்கள் குவிக்கத் தொடங்கினால் பிரித்வி ஷா மிகவும் ஆபத்தானவர்” - விராட் கோலி!
“ரன்கள் குவிக்கத் தொடங்கினால் பிரித்வி ஷா மிகவும் ஆபத்தானவர்” - விராட் கோலி!
“போஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டு விளையாடுங்கள்” - இந்திய அணியை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
“போஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டு விளையாடுங்கள்” - இந்திய அணியை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
“பவுலர்களின் கேப்டன்” - தோனியின் கேப்டன்ஸியை பாராட்டிய பிரக்யான் ஓஜா
“பவுலர்களின் கேப்டன்” - தோனியின் கேப்டன்ஸியை பாராட்டிய பிரக்யான் ஓஜா
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
“சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்களை இந்திய அணி செய்யவில்லை” - க்ரேக் மெக்மில்லன்
“சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்களை இந்திய அணி செய்யவில்லை” - க்ரேக் மெக்மில்லன்
Advertisement