"அவர் ஆட்டத்தை அப்படியே தொடரட்டும்" - ரோஹித் ஷர்மா குறித்து கங்குலி!

Updated: 22 August 2019 18:30 IST

உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா ஐந்து சதங்கள் அடித்து அசத்தினார். ஆனால், இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது.

Rohit Sharma Should Open In Tests As Well, Feels Sourav Ganguly
ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்கள் கொண்ட ஒரே வீரர் ரோஹித் ஷர்மா ஆவார். © AFP

உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா ஐந்து சதங்கள் அடித்து அசத்தினார். ஆனால், இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. இருந்தாலும், ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டின் துணைக் கேப்டன் ரஹானே மிடில் ஆர்டரில் ஆட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். "உலகக் கோப்பையில் இருந்து ரோஹித் தனது சிறப்பான ஆட்டத்தை தொடரவும், தொடக்க வீரராக விளையாடவதே எனது ஆலோசனையாக இருக்கும், அதே நேரத்தில் ரஹானே மிடில் ஆர்டரில் நிலைத்தன்மையை வழங்குவதற்கான தனது நல்ல பணியைத் தொடர்கிறார்," என்று கங்குலி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் கூறினார்.

ஆண்டிகுவாவில், வரும் வியாழக்கிழமை இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டியை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆடவுள்ளது.

32 வயதான ரோஹித் ஷர்மா, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலகக் கோப்பையிலும் அதிக ரன்கள் குவித்தார்.

ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்கள் கொண்ட ஒரே வீரர் ரோஹித் ஷர்மா ஆவார். அதிக ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆடும் ரோஹித் தன்னை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

"உலகக் கோப்பையில் தன்னை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலியாவில் ரஹானே சிறப்பாக செயல்படவில்லை".

அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இடையே இந்தியாவும் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். அவர் காயம் காரணமாக ஒரு வருடம் போட்டிகளிலிருந்து விலகியிருந்தார். இப்போது இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பன்ட் அந்த இடத்தில் உள்ளார்.

சஹாவின் மாற்றாக இருந்த பன்ட் தனது வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு, கடந்த ஆண்டு ஓவல் டெஸ்டில் ஒரு சதம் அடித்தார். அதே நேரத்தில் ஜனவரி மாதம் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் எடுத்தார்.

"ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக ஆடிய பிறகு, ரிஷப் பன்ட் விருத்திமானுக்கு முன்னால் ஆட வேண்டும்," என்றார் கங்குலி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பிரபல இந்தி திரைப்பட காட்சியை டிக்டாக் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
பிரபல இந்தி திரைப்பட காட்சியை டிக்டாக் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
“நாளை என்ற நாள் இல்லை என்று நினைத்து காதலியுங்கள்” - ரோஹித் ஷர்மா!
“நாளை என்ற நாள் இல்லை என்று நினைத்து காதலியுங்கள்” - ரோஹித் ஷர்மா!
ஐசிசி தரவரிசையில் கோலி நம்பர் 1, பும்ரா முதலிடத்தை தவறவிட்டார்!
ஐசிசி தரவரிசையில் கோலி நம்பர் 1, பும்ரா முதலிடத்தை தவறவிட்டார்!
1st ODI: கேன் வில்லியம்சன், ரோஹித் ஷர்மா இல்லாமல் மோதும் இரு அணிகள்! #preview
1st ODI: கேன் வில்லியம்சன், ரோஹித் ஷர்மா இல்லாமல் மோதும் இரு அணிகள்! #preview
இந்தியா vs நியூசிலாந்து: டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் யார்யாருக்கு இடம்!
இந்தியா vs நியூசிலாந்து: டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் யார்யாருக்கு இடம்!
Advertisement