"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!

Updated: 14 September 2019 17:51 IST

தோனியின் எதிர்காலம் குறித்து பேசிய கோலி, ரிஷப் பன்ட் போன்ற இளைஞர்களை அணி நிர்வாகம் பக்குவப்படுத்தினாலும், தோனி தொடர்ந்து விளையாடும் போது "மதிப்புமிக்கவராக" இருப்பார் என்றார்.

Virat Kohli Talks About Tweet That Sparked MS Dhoni
கோலியின் ட்விட் இந்தியாவின் முன்னாள் கேப்டனுக்கு ஒரு பிரியாவிடை செய்தியாக இருக்கலாம் என்று யூகங்கள் எழுந்தன. © AFP

விராட் கோலி வியாழக்கிழமை, ​​2016ம் ஆண்டின் ஒரு படத்தை ட்விட் செய்து, ​​எம் எஸ் தோனி "ஒரு உடற்பயிற்சி சோதனையைப் போலவே ஓடச் செய்ததற்காக" நன்றி தெரிவித்தார் . இது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாக மாறியது. கோலியின் ட்விட் இந்தியாவின் முன்னாள் கேப்டனுக்கு ஒரு பிரியாவிடை செய்தியாக இருக்கலாம் என்று யூகங்கள் எழுந்தன. "தோனியின் ஓய்வு குறித்து எந்த புது தகவலும் இல்லை, அந்தச் செய்தி பொய்யானது," என்று எம் எஸ் கே பிரசாத் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியை அறிவிக்கும் போது தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி20 முன்னதாக, அந்தப் படத்தை ட்விட் செய்தபோது கோலியின் மனதில் என்ன இருந்தது என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர், எவ்வாறு இரு விஷயத்தை தவறாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை "ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்" என்றும் கூறினார்.

"நான் வீட்டில் உட்கார்ந்திருந்தேன். நான் வழக்கமாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்தேன். அது இப்போது ஒரு செய்தியாக மாறியது" என்று கோலி சனிக்கிழமை தர்மசாலாவில் கூறினார்.

"இது எனக்கு ஒரு பாடம் என்று நான் நினைக்கிறேன், நான் நினைக்கும் விதத்தில், உலகம் நினைக்காது என்பதை புரிந்துகொண்டேன். அந்த படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடும் போது கற்பனை எதுவும் இல்லை," என்றார்.

இந்தியா தனது கடைசி குழு நிலை ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கேப்டன் விராட் கோலி 2016ம் ஆண்டு தொடரில் நடந்த, "சிறப்பான இரவு" குறித்து நினைவு கூர்ந்தார்."உடற்பயிற்சி சோதனையைப் போல் இயக்கினார்" என்று தோனிக்கு நன்றி தெரிவித்தார்.

"நான் எழுதியது போல. அந்த விளையாட்டை நான் இப்போது கூட நினைவில் வைத்திருக்கிறேன், எப்போதும் வைத்திருப்பேன். நான் அந்த போட்டி குறித்து பேசியதில்லை, அதனால் பதிவு செய்தேன். இப்போது மக்கள் அதை வேறு விதமாக விளக்கினர், அதில் உண்மை எதுவும் இல்லை," என்றார் கோலி.

சமீபத்தில், தோனி மோசமான பேட்டிங்கிற்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெளியேறிய பின்னர் தோனி கிரிக்கெட்டிலிருந்து 2 மாதங்கள் ஓய்வு அறிவித்து, ராணுவத்தில் பணியாற்றச் சென்றார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பெறவில்லை. மேலும், தென்னாப்பிரிக்காவுடன் ஆடவிருக்கும் டி20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.

38 வயதானவரின் எதிர்காலம் குறித்து பேசிய கோலி, ரிஷப் பன்ட் போன்ற இளைஞர்களை அணி நிர்வாகம் பக்குவப்படுத்தினாலும்,  தோனி தொடர்ந்து விளையாடும் போது "மதிப்புமிக்கவராக" இருப்பார் என்றார்.

"அவரைப் பற்றிய ஒரு பெரிய விஷயம் (தோனி) என்னவென்றால், அவர் இந்திய கிரிக்கெட்டைப் பற்றி எப்போது நினைக்கிறார். நாம் (குழு நிர்வாகம்) என்ன நினைத்தாலும், அவரும் அதே போன்று யோசிக்கிறார். இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவதும், அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதும் பற்றி அவர் கொண்டிருந்த மனநிலை, இன்றும் அவர் அதே நபராக தான் உள்ளார்," என்றார் கோலி.

மற்ற இரண்டு டி20 போட்டிகள் மொகாலி(செப்டம்பர்) மற்றும் பெங்களூருவில் (செப்டம்பர் 22) நடக்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்!
டாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்!
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
Advertisement