முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மாதவ் ஆப்தே காலமானார்!

Updated: 23 September 2019 15:11 IST

மூத்த கிரிக்கெட் வீரரான மாதவ் ஆப்தே, மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர். அவருக்கு வயது 86.

Legendary Cricketer Madhav Apte Dies
7 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய மாதவ் ஆப்தே, 542 ரன்கள் குவித்தார். அதில் ஒரு சதமும், மூன்று அரைசதமும் குவித்தார். © AFP

மூத்த கிரிக்கெட் வீரரான மாதவ் ஆப்தே, மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர். அவருக்கு வயது 86. முன்னாள் இந்தியா மற்றும் மும்பை தொடக்க வீரரான மாதவ், ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் காலை 6.09 மணிக்கு கடைசியாக மூச்சு விட்டார் என்று அவரது மகன் வாமன் ஆப்தே பிடிஐயிடம் கூறினார். 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய மாதவ் ஆப்தே, 542 ரன்கள் குவித்தார். அதில் ஒரு சதமும், மூன்று அரைசதமும் குவித்தார்.

அவருடைய அதிகபடியான ரன்கள் 163 நாட் அவுட். அவர் ஒரு சிறந்த முதல் வகுப்பு சாதனையைப் பெற்றார், அங்கு அவர் 67 போட்டிகளில் இருந்து ஆறு சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் உட்பட 3,336 ரன்கள் எடுத்தார்.
அவருடைய அதிகபடியான ரன்க: 165.

நவம்பர் 1952ல் மும்பையில் நடந்த கிரிக்கெட் க்ளப் ஆஃப் இந்தியாவில் (சி.சி.ஐ) பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் அறிமுகமானார். ஏப்ரல் 1953ல் கிங்ஸ்டனில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது கடைசி டெஸ்டில் விளையாடினார்.

தனது முதல் டெஸ்டில் முறையே 30 மற்றும் 10 ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு டெஸ்ட் தொடரில் 400 ரன்களுக்கு மேல் திரட்டிய முதல் இந்திய தொடக்க வீரர் இவர் (1953 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 460 ரன்கள்). உள்நாட்டு கிரிக்கெட்டிலும் மும்பைக்கு கேப்டனாக இருந்தார்.

தொடக்க வீரராக மாதவ் ஆப்தே புகழ்பெற்ற வினூ மங்கட்டுடன் நியமிக்கப்பட்டார். மங்கட், பாலி உம்ரிகர், விஜய் ஹசாரே, ரூசி மோடி உள்ளிட்ட பல புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களுடன் அவர் விளையாடினார்.

அவர் முன்னர் சி.சி.ஐ.யின் தலைவராகவும் பணியாற்றினார் என்று ஒரு அதிகாரி கூறினார். அவரது கடைசி மூச்சு வரை, அவர் பல்வேறு விளையாட்டு வீரர்களின் சாதனைகளை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்ட 'லெஜண்ட்ஸ் கிளப்பின்' தலைவராக இருந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
இந்தியா vs பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி:எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி:எங்கு, எப்போது காணலாம்?
IndVsBan 1st Test: தொடர்ந்து முன்னிலை பெற இந்தியா தீவிரம்!
IndVsBan 1st Test: தொடர்ந்து முன்னிலை பெற இந்தியா தீவிரம்!
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
Advertisement