நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரையன் லாராவின் உருக்கமான மெஸேஜ்!

Updated: 26 June 2019 10:32 IST

லாரா, மொத்தமாக 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 52.89 சராசரியில் 11,953 ரன்கள் எடுத்தார்.

கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவானான பிரையன் லாரா, திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மும்பையில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லாராவின் உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தவுடன், அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கவலையுடன் போஸ்டகளை இட்டு வந்த நிலையயில், தனது உடல்நிலை குறித்து அவரே பேசியுள்ளார்.

கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் இணையதளத்தில் லாரா பேசிய ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. “எல்லோருக்கும் என்னைப் பற்றிய கவலை இருக்கும் என்பதை அறிவேன். ஜிம்மில் கொஞ்சம் அதீதமாக பயிற்சி எடுத்திருப்பேன் என நினைக்கிறேன். அதைத் தொடர்ந்துதான் எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. எனவே, மருத்துவரை சந்தித்து அது குறித்து தெளிவு பெறலாம் என்று முடிவு செய்தேன். எனக்கு மருத்துவமனையில் பல சோதனைகள் செய்யப்பட்டன. 

தற்போது எனது மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் இங்கிலாந்தின் ரசிகன் அல்ல. ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என நம்புகிறேன். நான் சீக்கிரமே குணமடையப் போகிறேன். எனது போனிற்குத் தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. எனவே, இப்போது அதை அணைத்து வைக்கப் போகிறேன். 

நான் விரைவாக குணமடைந்து வருகிறேன் என்பதை எல்லோர் இடத்திலும் தெரிவித்துக் கொள்ளவே இந்த ஆடியோ மெஸேஜ். எனது ஓட்டல் அறைக்கு விரைவில் திரும்புவேன். உங்கள் அன்புக்கு நன்றி” என்று ஆடியோ மெஸேஜ் மூலம் கூறியிருந்தார் லாரா. 

டிரினிடாடில் பிறந்த லாராவுக்குத் தற்போது 50 வயதாகிறது. இதுவரை விளையாடியதிலேயே மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று பெயர் எடுத்தவர் லாரா. 

லாரா, மொத்தமாக 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 52.89 சராசரியில் 11,953 ரன்கள் எடுத்தார். அதேபோல 299 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 40.17 சராசரியில் 10,405 ரன்கள் குவித்தார்.

டெஸ்ட் அரங்கில் 400 ரன்கள் அடித்தப் பெருமை லாராவுக்கு மட்டுமே சொந்தம். 

Comments
ஹைலைட்ஸ்
  • பரேலில் உள்ள க்ளோபல் மருத்துவமனையில் லாரா அனுமதிக்கப்பட்டுள்ளார்
  • உலக கோப்பைத் தொடர் குறித்து நிகழ்ச்சிக்காக இந்தியாவில் இருக்கிறார் லாரா
  • லாராவுக்குப் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்
தொடர்புடைய கட்டுரைகள்
"அனைத்து ஐசிசி போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறும்" - பிரையன் லாரா
"அனைத்து ஐசிசி போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறும்" - பிரையன் லாரா
"735 நாட் அவுட்" - 3 சதங்களுக்கு பிறகு டேவிட் வார்னரை சந்தித்த பிரைன் லாரா!
"735 நாட் அவுட்" - 3 சதங்களுக்கு பிறகு டேவிட் வார்னரை சந்தித்த பிரைன் லாரா!
Brian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்!
Brian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்!
"லாராவின் சாதனையை சச்சின் மிஞ்சிய தினம் இன்று" - வீடியோ பதிவிட்ட பிசிசிஐ!
"லாராவின் சாதனையை சச்சின் மிஞ்சிய தினம் இன்று" - வீடியோ பதிவிட்ட பிசிசிஐ!
கிரிக்கெட் களத்தில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா!
கிரிக்கெட் களத்தில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா!
Advertisement