''வந்தா ராஜாவாதான் வருவேன்'' மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்பினார் மலிங்கா!

Updated: 15 December 2018 14:59 IST

அரசியல் சூழல் காரணமாக விளையாட்டு அமைச்சர் பதவியில் யாரும் இல்லாததால், கிரிக்கெட் வாரியம் அதிபரின் ஒப்புதலோடு அணியின் விவரத்தை வெளியிட்டுள்ளது. 

Lasith Malinga Back As Sri Lanka ODI, T20I Skipper
2016 பிப்ரவரியில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதிலிருந்து லசித் மலிங்கா தேசிய அணியை வழிநடத்தவில்லை. © Twitter

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக தொடங்கவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடுவதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான அணியை அறிவித்த இலங்கை கிரிக்கெட் வாரியம் 17 பேர் கொண்ட அணிக்கு லசித் மலிங்கா கேப்டனாக இருப்பார் என்று கூறி ஆச்சர்யமளித்தது. 2016 பிப்ரவரியில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதிலிருந்து அவர் தேசிய அணியை வழிநடத்தவில்லை. இந்நிலையில், இந்தத் தொடரில் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த அணியை அதிபர் சிறிசேனா ஒப்புதல் தெரிவித்து வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் சூழல் காரணமாக விளையாட்டு அமைச்சர் பதவியில் யாரும் இல்லாததால், கிரிக்கெட் வாரியம் அதிபரின் ஒப்புதலோடு வெளியிட்டுள்ளது. 

இலங்கை அணி விவரம்:

மலிங்கா, டிக்வாலா, மேத்யூஸ், குணதிலகா, ஜ்ய்ஷால் பெரேரா, சண்டிமல், அஸில குணரத்னே, குஷால் மெண்டிஸ், தனஞ்ஜெயா, திஸேரா பெரேரா, சனகா, சண்டகன், பிரசன்னா, சமீரா, கசுன் ரஜிதா, நுவான் ப்ரதீப் மற்றும் லஹிரு குமரா.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"வேகமாக பந்து வீசுவது எனக்கு இயல்பாகவே வருகிறது" - நவ்தீப் சைனி
"வேகமாக பந்து வீசுவது எனக்கு இயல்பாகவே வருகிறது" - நவ்தீப் சைனி
"கடினமான சூழ்நிலைகளை கையாள இலங்கை வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்" - மலிங்கா
"கடினமான சூழ்நிலைகளை கையாள இலங்கை வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்" - மலிங்கா
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
3rd T20I: ஆடும் லெவனில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன் படைத்த இந்திய சாதனை!
3rd T20I: ஆடும் லெவனில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன் படைத்த இந்திய சாதனை!
INDvSL: 3வது டி20 போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
INDvSL: 3வது டி20 போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
Advertisement