கிரிக்கெட் விதிகளை தீர்மானிக்கும் எம்சிசிக்கு தலைவராகும் குமார் சங்ககாரா

Updated: 02 May 2019 17:23 IST

இதுவரை அரச பரம்பரையில் இருந்தவர்களே பொறுப்பில் இருந்தனர். ஆனால் தற்போது சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Kumar Sangakkara Named As First Non-British MCC President
முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா மெர்ல்போன் கிரிக்கெட் க்ளப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். © AFP

முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா மெர்ல்போன் கிரிக்கெட் க்ளப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து வீரர் அல்லாத ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் எம்சிசி தலைவராக டெட் டெக்ஸ்டர், டெரக் அண்டர்வுட், மைக் பிரியர்லே, காலின் கவர்டி, மைக் கேட்டிங் மற்றும் குப்பி ஆலன் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவருமே இங்கிலாந்தை சார்ந்தவர்கள் தான். சங்ககாராதான் முதல் வெளிநாட்டு வீரர். 233 வருட வரலாற்றில்  விக்கேட் கீப்பர் பேட்ஸ்மேனான சங்ககாரா வரும் அக்டோபரில் எம்சிசி தலைவராக பதவியேற்கவுள்ளார்.

41 வயதான இவர் எம்சிசியின் வாழ்நாள் உறுப்பினர். இதனை "மிகப்பெரிய கெளரவம்" என்று சங்ககார தெரிவித்துள்ளார். 

எம்சிசி கிரிக்கெட்டுக்கான விதிகளை 1977 முதல் வகுத்து வரும் அமைப்பாகும். இதுவரை இந்த அமைப்புக்கு 168 தலைவர்கள் இருந்துள்ளனர். 

இதுவரை அரச பரம்பரையில் இருந்தவர்களே பொறுப்பில் இருந்தனர். ஆனால் தற்போது சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியே காரணம் என்று கூறப்படுகிறது. 

Comments
ஹைலைட்ஸ்
  • இங்கிலாந்து வீரர் அல்லாத ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை
  • 41 வயதான இவர் எம்சிசியின் வாழ்நாள் உறுப்பினர்
  • இதுவரை இந்த அமைப்புக்கு 168 தலைவர்கள் இருந்துள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
கிரிக்கெட் விதிகளை தீர்மானிக்கும் எம்சிசிக்கு தலைவராகும் குமார் சங்ககாரா
கிரிக்கெட் விதிகளை தீர்மானிக்கும் எம்சிசிக்கு தலைவராகும் குமார் சங்ககாரா
"இன்றைய கிரிக்கெட் விராட் கோலியின் தோள்களில் உள்ளது" - சங்ககாரா!
"இன்றைய கிரிக்கெட் விராட் கோலியின் தோள்களில் உள்ளது" - சங்ககாரா!
அலஸ்டர் குக்கின் ப்ளேயிங் 11ல் இடம் பெறாத இந்தியர்கள்
அலஸ்டர் குக்கின் ப்ளேயிங் 11ல் இடம் பெறாத இந்தியர்கள்
Advertisement