"அஷ்வின் மற்றும் ஜடேஜாவை யாராலும் நீக்க முடியாது" : குல்தீப் யாதவ்

Updated: 04 March 2019 18:56 IST

''நானும், சஹாலும் யாரையும் அணியிலிருந்து நீக்கவில்லை. எங்கள் வாய்ப்பில் சிறப்பாக பயன்படுத்தி கொள்கிறோம்" - குல்தீப்

India vs Australia: Wrist Spinners Have Not Removed Ravichandran Ashwin, Ravindra Jadeja From Team, Says Kuldeep Yadav
குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களாக உருவெடுத்துள்ளனர். © AFP

குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களாக உருவெடுத்துள்ளனர். வெளிநாட்டு தொடர்களில் குல்தீப் பிரதானமாக தேர்ந்தெடுக்கப்படுவது இந்தியாவின் வழக்கமாகியுள்ளது. அதனால், இந்தியாவின் லெக் ஸ்பின்னர்களால் அஷ்வின், ஜடேஜாவின் இடம் பறிபோகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஜடேஜா, குல்தீப்புடன் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பந்துவீசி வருகிறார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய குல்தீப் ''நானும், சஹாலும் யாரையும் அணியிலிருந்து நீக்கவில்லை. எங்கள் வாய்ப்பில் சிறப்பாக பயன்படுத்தி கொள்கிறோம்" என்றார்.

"டெஸ்ட்டில் ஜடேஜாவுடன் பந்துவீசுவது  நல்ல அனுபவத்தை தருகிறது. அவரிடம் நிறைய கற்றுக்கொள்கிறேன்" என்றார்.

எந்த பேட்ஸ்மேனுக்காவது பந்துவீசுவது அழுத்தமாக இருந்ததா என்ற கேள்விக்கு ''யாருக்கும் இருந்ததில்லை. சிலர் நன்றாக ஆடுகிறார்கள். ஆனால், அவர்களை பார்த்து பயமில்லை" என்றார். ஆனால் ஷான் மார்ஷ் தனது பந்தை சிறப்பாக ஆடுவதாக கூறினார்.

12 போட்டிகள் ஆஸ்திரேலியாவுடன் ஆடியுள்ள குல்தீப், "அவர்களை பற்றிய புரிதல் வந்துள்ளது. சரியான முறையில் பந்துவீசி நெருக்கடி தர வேண்டும்" என்றார்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • நானும், சஹாலும் வாய்ப்பில் சிறப்பாக பயன்படுத்தி கொள்கிறோம்: குல்தீப்
  • குல்தீப் யாதவ், சஹால் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களாக உருவெடுத்துள்ளனர்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி செவ்வாயன்று நாக்பூரில் நடக்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
2வது ஒருநாள்: முதல் போட்டியில் நடந்த தவறுகளை சரி செய்யுமா இந்தியா?
2வது ஒருநாள்: முதல் போட்டியில் நடந்த தவறுகளை சரி செய்யுமா இந்தியா?
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
ஒருநாள் போட்டிகளில் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
ஒருநாள் போட்டிகளில் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
ஒருநாள் போட்டிகளில் 2 ஹாட்ரிக் பெற்ற முதல் இந்தியர் ஆனார் குல்தீப் யாதவ்!
ஒருநாள் போட்டிகளில் 2 ஹாட்ரிக் பெற்ற முதல் இந்தியர் ஆனார் குல்தீப் யாதவ்!
Advertisement