
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இந்த தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. ஆனாலும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் டி20 தரவரிசையில் தனது சிறந்த நிலையான இரண்டாம் நிலையை எட்டினார். முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத குல்தீப் மூன்றாவது போட்டியில் செய்ஃபெர்ட் மற்றும் முன்ரோவை வீழ்த்தி அசத்தினார்.
ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மிட்செல் சண்ட்னர் 4 இடங்கள் முன்னேறி 10வது இடத்தையும், க்ருணால் பாண்ட்யா தனது சிறந்த நிலையான 58 வது இடத்தையும் பிடித்தனர்.
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாஸிம் 5 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை இடித்தார். இந்த தொடரை பாகிஸ்தான் 1-2 என்ற கணக்கில் தென்னாபிரிக்காவிடம் இழந்தனர்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் அஸாம் முதலிடத்திலும், ரோஹித் ஷர்மா மற்றும் தவான் முறையே 7 மற்றும் 11வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 12வது இடத்தில் உள்ளார்.