"இப்படியேபோனால் கோலி 100 சதங்கள் அடிப்பார்" - முகமது அசாருதீன்

Updated: 17 January 2019 13:08 IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதமடித்தன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 39வது சதத்தை கோலி நிறைவு செய்தார்.

Virat Kohli Will Score 100 International Centuries If He Remains Fit, Says Mohammad Azharuddin
Virat Kohli: இந்தியா, இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. © Twitter/BCCI

இந்திய கேப்டன் விராட் கோலி குறித்த செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு சாதனைகளை செய்துவரும் சர்வதேச கிரிக்கெட்டின் முக்கியமான வீரர் கோலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதமடித்தன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 39வது சதத்தை கோலி நிறைவு செய்தார். இந்தியா, இந்தப் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ள கருத்து, கோலி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆஜ் தக் சேனலுக்கு அளித்த பேட்டியில் அசாருதீன் ''இதே உடல்தகுதியுடன் கோலி ஆடினால் 100 சதங்களை அசாதாரணமாக அடிப்பார். உலகின் எந்த வீரருக்கும் இல்லாத தொடர்ச்சியான ஃபார்ம் கோலியிடம் உள்ளது'' என்று கூறினார்.

கோலி மட்டுமல்ல, தோனியின் ஃபார்ம் இந்தத் தொடரில் அபாரமாக உள்ளது. இரண்டு போட்டிகளிலும் அரைசதமடித்து அசத்தினார். ஆட்டம் முடிந்து கேப்டன் கோலி பேசும் போது '' தோனியின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. ஆட்டத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் தோனி. அவருக்கு மட்டுமே அவரது மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியும்'' என்றார்.

இந்தியா இந்தத் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. தொடரை முடிவு செய்யும் போட்டி நாளை மெல்பெர்னில் நடக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற கோலியின் சதம் உதவியது
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 39வது சதத்தை நிறைவு செய்தார்
  • கோலியின் உடல் தகுதியை முன்னாள் வீரர் அசாருதீன் பாராட்டினார்
தொடர்புடைய கட்டுரைகள்
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
Advertisement