Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!

Updated: 17 September 2019 15:05 IST

இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் இருவரும் பிரதமருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Narendra Modi Birthday: Virat Kohli, Sachin Tendulkar Lead Wishes From Cricket Fraternity
"தேசத்தை அதிக உயரத்திற்கு அழைத்துச் செல்வதற்கான உங்கள் முயற்சியில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறோம்," என்று கோலி ட்விட் செய்தார்

பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கிரிக்கெட் உலகில் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் இருவரும் பிரதமருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். "எங்கள் மரியாதைக்குரிய பிரதமர் @narendramodi ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்தை அதிக உயரத்திற்கு அழைத்துச் செல்வதற்கான உங்கள் முயற்சியில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறோம்," என்று கோலி ட்விட் செய்தார். "பிறந்தநாள் வாழ்த்துக்கள் மரியாதைக்குரிய பிரதமர் @narendramodi  ஜி. ஆரோக்கியமான மற்றும் தூய்மையான இந்தியாவுக்கான உங்கள் பார்வை அனைவருக்கும் ஒரு உத்வேகம். நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்," என்று டெண்டுல்கர் ட்விட் செய்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், "நாட்டை முன்னெப்போதையும் விட பெரியதாக மாற்றுவதற்கான உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் நன்றி சார்," என்று ட்விட் செய்தார்.

"எங்கள் மரியாதைக்குரிய பிரதமர் @narendramodi ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், அடுத்த ஆண்டுகளில் சிறந்த சாதனைகளும் பெற வாழ்த்துக்கள்," என்று புஜாரா ட்விட் செய்தார்.

"ஒரு பிரதமர் தனது தாய்க்கு வழங்கிய அதே மரியாதையை நாடாளுமன்றத்திற்கும் வழங்கியதற்கும், அவர்களுக்கு முன்னால் மட்டுமே தலை குனிந்ததற்கும் நாங்கள் பெருமைப்படுகிறோம்," என்று கம்பீர் ஹிந்தியில் ட்விட் செய்தார்.

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் பிரமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடி தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்துக்கு செல்லவுள்ளார். பிரதமர் நர்மதா நதியில் உள்ள ஒற்றுமை சிலைக்கு சென்றார். மேலும் "நமாமி நர்மதா" திருவிழாவை பார்க்க சர்தார் சரோவர் அணைக்கு வருகை தருகிறார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இன்று மோடி தன்னுடைய 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
  • விராட் கோலி, டெண்டுல்கர் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்
  • பிஜேபி எம்பி, முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்பீர் வாழ்த்து தெரிவித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
'மை பார்ட்னர் இன் கிரைம்' - கோலியின் அந்த பார்ட்னர் யார்?
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
Advertisement