சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி!

Updated: 15 August 2019 18:55 IST

டக் வொர்த் லூயில் முறைபடி, 35 ஓவர்களுக்கு குறைக்கப்பட்ட போட்டியில் இந்திய அணி 255 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

3rd ODI: Virat Kohli Scores Century, Becomes Top Scorer In A Decade In International Cricket
விராட் கோலி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தன்னுடைய 43வது சதத்தை நிறைவு செய்தார். © Twitter

விராட் கோலி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தன்னுடைய 43வது சதத்தை நிறைவு செய்தார். இந்த சதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் இரண்டாவது மற்றும் ஒன்பதாவது சதமாகும். டக் வொர்த் லூயில் முறைபடி, 35 ஓவர்களுக்கு குறைக்கப்பட்ட போட்டியில் இந்திய அணி 255 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் கோலி 10 பவுண்டரிகளுடன் 93 பந்தில் சதமடித்தார். இதனால் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களுக்கு நெருங்கியுள்ளார். அந்த சாதனையை முறியடிக்க இன்னும் 7 சதங்கள் தேவைப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில், கோலி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2000த்தில் ரிக்கி பாண்டிங் எடுத்த 18,962 ரன்களை முடியடித்துள்ளார் கோலி.

மேற்கிந்திய தீவுகள் அணி 22 ஓவருக்கு 158 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. பின்னர் ஆட்டம் 35 ஓவருக்கு குறைக்கப்பட்டது.

ஷாய் ஹோப் (24) மற்றும் சிம்ரன் ஹெட்மெயர் (25) என ஆடி  அந்த வீரர்களை முகமது ஷமியும், ஜடேஜாவும் அவுட் ஆக்கினர்.

200 ரன்களை கடக்க நிக்கோலஸ் பூரான் 16 பந்தில் 30 ரன்கள் எடுத்தது உதவியது. ஜடேஜா மற்றும் சஹால் பந்துகளை சிறப்பாக கையாண்டார் பூரான்.

ஷமி வீசிய பந்தை எதிர்கொண்ட பூரான், மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

கார்லஸ் ப்ராத்வெயிட் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து 16 ரன்கள் குவித்தார். கடைசி சர்வதேச போட்டியில் கெயில் தன்னை சிறப்பாக நிரூபித்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!
Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"
"'A' ஃபார் அனுஷ்கா" - கோலி வெளியிட்ட புகைப்படத்தை ஆராய்ந்த ரசிகர்கள்!
Advertisement