"விரக்தியடைந்த யாரோ தான் இதை செய்திருப்பார்கள்" - கோலி-ரோஹித் குறித்து கவாஸ்கர்!

Updated: 09 August 2019 18:18 IST

இதுபோன்று கதை சொல்பவர்கள் கண்டிப்பாக இந்திய அணிக்கு நல்லது நினைப்பவர்களாக இருக்க முடியாது. அணியின் மீது விரக்தியடைந்த ஒருசில வீரர்கள் தான் கதைகளுக்கு சொந்தமானவர்களாக இருப்பார்கள். - கவாஸ்கர்

Virat Kohli, Rohit Sharma Rift Possibly Made Up By Frustrated Player In Squad, Says Sunil Gavaskar
தனக்கும் ரோஹித்துக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று ரோஹித் ஏற்கெனவே கூறியிருந்தார். © AFP

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவருக்கு இடையில் பிரச்னை என சொல்லப்படுவது, அவர் கிரிக்கெட்டில் இருந்த போது நடந்த நிகழ்வை நினைவுப்படுத்துவதாக கூறினார். அவருக்கும் கபில் தேவுக்கும் இடையில் பிரச்னை என அப்போது வதந்திகள் கிளம்பியதாக கவாஸ்கர் கூறினார். உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி வெளியேறியதால், அணியில் விருப்பம் இல்லாத யாரோ தான் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வாய்ப்புள்ளாதாக அவர் கூறினார். ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் இந்திய அணியில் இருக்கும் நிலவரம் குறித்து பேசிய கவாஸ்கர் இதை கூறினார். இதுபோன்ற வதந்திகள், இந்திய அணிக்கு நல்லது நினைக்காத சிலரால் தான் சொல்லப்படுகிறது என்றார் கவாஸ்கர்.

"இதுபோன்று கதை சொல்பவர்கள் கண்டிப்பாக இந்திய அணிக்கு நல்லது நினைப்பவர்களாக இருக்க முடியாது. அணியின் மீது விரக்தியடைந்த ஒருசில வீரர்கள் தான் கதைகளுக்கு சொந்தமானவர்களாக இருப்பார்கள். அவரின் பொறாமை அணிக்கு தீங்கு விளைவிக்கும். நிர்வாகத்தில் சிலரும் அவர்களுக்கு தேவையான போது இப்படி செய்வதுமுண்டு," என்றார் கவாஸ்கர்.

1984-85 ஆண்டு கபில் தேவ் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியில் இடம்பெறாத போது, அதற்கு அவர் தான் காரணம் என்று சொல்லப்பட்டதாக கவாஸ்கர் தெரிவித்தார்.

"1984-85 ஆண்டு இங்கிலாந்து எதிரான ஒருநாள் போட்டியில் கபில் தேவ் இடம்பெறாத போது, அதற்கு நான் காரணம் என்று எளிதாக சொல்லிவிட்டனர். ஆனால், இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது என்னால் சொல்லப்படவில்லை, ஏனெனில் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்த மறைந்த ஹனுமந்த் சிங், ஒரு வருடம் கழித்து அவர் எழுதிய ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்," என்றார் கவாஸ்கர்.

இதற்கு முன்னால், விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்பட்டதற்கு இந்திய தேர்வுக்குழுவினரை கவாஸ்கர் "மந்தமான வாத்துக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
"ஆடும் லெவனில் அஸ்வின் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது" - சுனில் கவாஸ்கர்!
"ஆடும் லெவனில் அஸ்வின் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது" - சுனில் கவாஸ்கர்!
"இந்திய அணியில் ஸ்ரேயாஸுக்கு நிரந்தர இடம் கிடைக்க வேண்டும்" - சுனில் கவாஸ்கர்!
"இந்திய அணியில் ஸ்ரேயாஸுக்கு நிரந்தர இடம் கிடைக்க வேண்டும்" - சுனில் கவாஸ்கர்!
"விரக்தியடைந்த யாரோ தான் இதை செய்திருப்பார்கள்" - கோலி-ரோஹித் குறித்து கவாஸ்கர்!
"விரக்தியடைந்த யாரோ தான் இதை செய்திருப்பார்கள்" - கோலி-ரோஹித் குறித்து கவாஸ்கர்!
கோலி குறித்து கவாஸ்கர் கருத்துக்கு பதிலளித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
கோலி குறித்து கவாஸ்கர் கருத்துக்கு பதிலளித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
Advertisement