3வது ஒருநாள்: கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமாக போகும் புது சாதனை?

Updated: 14 August 2019 17:51 IST

ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து 27 ரன்கள் குவித்தால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1000 ரன்கள் எடுத்த முதல் இணை என்ற பெருமையை பெறுவார்கள்.

Virat Kohli-Rohit Sharma On Verge Of Becoming First Pair To Score 1,000 Runs Against West Indies
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர். © AFP

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து பல நினைவில் இருக்கு சாதனைகளை செய்திருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இவர்கள் இருவரும் இணைந்து புதிய சாதனை படைக்கவுள்ளனர். இருவரும் இணைந்து 27 ரன்கள் குவித்தால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1000 ரன்கள் எடுத்த முதல் இணை என்ற பெருமையை பெறுவார்கள்.

கோலி திரும்பவும் சிறப்பாக ஆடி இரண்டாவது ஒருநாள் போட்டியில் தன்னுடைய 42வது சதத்தை குவித்தார். இதனால், முன்னாள் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து, அதிக சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில், ஒருநாள் கிரிக்கெட் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முதலிடம் பிடித்த சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து கோலி மட்டுமே உள்ளார்.

இதேசமயம், குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டியில் மிக விரைவாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற வாய்ப்புள்ளது. 24 வயதான குல்தீப் 53 ஒருநாள் போட்டியில் 96 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வெறும் 4 விக்கெட்டுகள் எடுத்தால் இந்த சாதனையை அவர் படைக்க வாய்ப்புள்ளது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினால், அவர் வேகமாக 100 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற வாய்ப்புள்ளது. இதை செய்தால், முகமது ஷமி 56 ஒருநாள் போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி மூன்றையும் வென்று தொடரை கைப்பற்றியது.

Comments
ஹைலைட்ஸ்
  • கோலி, ரோஹித் ஷர்மா இந்திய அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர்
  • கோலி அதிக சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்
  • குல்தீப் வேகமாக 100 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
கெஸ்ரிக் வில்லியம்ஸின் "நோட்புக்" கிண்டலுக்கு பதிலளித்த விராட் கோலி!
கெஸ்ரிக் வில்லியம்ஸின் "நோட்புக்" கிண்டலுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
"பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் எதிலும் உலகத்தரம் இல்லை" - அப்துல் ரஸாக்
"பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் எதிலும் உலகத்தரம் இல்லை" - அப்துல் ரஸாக்
Advertisement