பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!

Updated: 22 August 2019 11:10 IST

விராட் கோலி தனது மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸுடனான உறவை வெளிப்படுத்தியுள்ளார்.

Virat Kohli, Viv Richards Come Together For A "Special Interaction", BCCI Releases Teaser
பிசிசிஐ கோலி மற்றும் ரிச்சர்ட்ஸ் இடையேயான சிறப்பு உரையாடலின் 15 நொடி டீஸரை வெளியிட்டுள்ளது.  © Twitter

விராட் கோலி தனது மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸுடனான உறவை வெளிப்படுத்தியுள்ளார். கோலியை விவியன் ரிச்சர்ட்ஸின் அதிரடி ஆட்டத்தோடு ஒப்பிட்டு பேசுவார்கள். மற்றவர்கள் மட்டுமல்ல ரிச்சர்ட்ஸே கோலியை தன்னோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். பிசிசிஐ கோலி மற்றும் ரிச்சர்ட்ஸ் இடையேயான சிறப்பு உரையாடலின் 15 நொடி டீஸரை வெளியிட்டுள்ளது. 

அந்த டீஸரில் நாங்கள் நாளை ரிச்சர்ட்ஸுடன் கோலி உரையாடும் சிரப்பு உரையாடலை வெளியிடவுள்ளோம் என்று கூறியுள்ளது.

இந்த டீஸரில் பெரிதாக உரையாடல்களின் பகுதி இடம்பெறவில்லை. உரையாடலுக்கு தயாராகும் விதம் கேமராக்களை ஒளிபரப்புக்குழு வைப்பது போன்ற காட்சிகளே இடம்பெற்றன. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக அமைந்தது.

முன்னதாக கோலி த்னது டிவிட்டர் பக்கத்தில் ரிச்சர்ட்ஸுடனான புகைப்படத்தை பிக்கஸ்ட் பாஸ் என்று பதிவிட்டிருந்தார்.

கோலி மட்டுமல்ல இந்திய அணிக்காக புதிய பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்த்ரியும் ரிச்சர்ட்ஸை புகழ்ந்தார்.

67 வயதான ரிச்சர்ட்ஸ் 1980களின் கிரிக்கெட் உலக ராஜாவாக வலம் வந்தார். அவர் 121 டெஸ்ட் போட்டிகளில் 8540 ரன்களையும் , ஒருநாள் போட்டிகளில் 6721 ரன்களையும் குவித்துள்ளார்.

இந்தியா மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. அதிலிருந்து இந்தியா தனது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை துவங்குகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஸ்ரேயால், பன்ட் ஒன்றாக வந்திருந்தால் வேடிக்கையாக இருந்திருக்கும்" - கோலி
"ஸ்ரேயால், பன்ட் ஒன்றாக வந்திருந்தால் வேடிக்கையாக இருந்திருக்கும்" - கோலி
3வது டி20: தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
3வது டி20: தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
Advertisement