"இன்றைய கிரிக்கெட் விராட் கோலியின் தோள்களில் உள்ளது" - சங்ககாரா!

Updated: 12 February 2019 15:08 IST

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றார்

Virat Kohli Head And Shoulders Above Anyone Else In World, Feels Kumar Sangakkara
விராட் கோலி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தினார். © AFP

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றார். இந்திய கேப்டன் கோலி 4 டெஸ்ட்களில் 282 ரன்களையும், மூன்று ஒருநாள் போட்டிகளில் 153 ரன்களையும், நியூசிலாந்துடனான 3 ஒருநாள் போட்டிகளில் 148 ரன்களையும் குவித்தார். விராட் கோலியின் பேட்டிங் குறித்து இலங்கையின் முன்னாள் வீரர் சங்ககாரா கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ''விராட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரது தலை மற்றும் தோளில் தான் இன்றைய உலக கிரிக்கெட்டே உள்ளது" என்றார். மேலும் "விராட் வளர்த்துவரும் வேகத்தை பார்க்கையில் அவர்தான் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீராராக இருக்கிறார்" என்றார். 

இந்தியாவின் ரன் மெஷின் என்று வர்ணிக்கப்படும் கோலி, 2018ம் ஆண்டு சர்வதேச கிரிகெட் வீரர், 2018ம் ஆண்டின் ஐசிசியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து சாதனை படைத்தார். 

வில்லியம்சன், ஸ்மித், ரூட் என கடுமையான போட்டி நிலவும் சக காலத்தில் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதலிடம் வகிக்கிறார். 

222 ஒருநாள் போட்டிகளில் 39 சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். இவருக்கு முன் சச்சின் 463 போட்டிகள் ஆடி 49 சதம்டித்தார். மேலும் கோலி 77 டெஸ்ட்களில் 25 சதமடித்துள்ளார். 

கோலி அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவரது சாதனைகளை கண்டு வியப்பதாக சங்ககாரா தெரிவித்தார். 

"கோலி தனது பேட்டிங்கை நுட்பத்துடனும், ஈடுபாட்டுடனும் ஆடி வருகிறார். 1.3 பில்லியன் மக்கள் உள்ள நாட்டின் அணியை வழிநடத்துவது  எளிதான காரியமல்ல. களத்துக்குள்ளும், களத்துக்கு வெளியேவும் உள்ள அழுத்தத்தை சமாளிப்பதுதான் விராட் கோலியின் பலம்" என்று மஹிளா ஜெயவர்த்தனேவும் கூறியுள்ளார். சச்சினை பார்த்து வளர்ந்த தலைமுறை நாங்கள் அடுத்த தலைமுறை கோலியை பார்த்து வளரும் என்றும் ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
  • கோலி 4 டெஸ்ட்களில் 282,மூன்று ஒருநாள் போட்டியில் 153 ரன்கள் எடுத்துள்ளார்
  • நியூசிலாந்துடனான 3 ஒருநாள் போட்டிகளில் 148 ரன்களையும் குவித்தார் கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட விராட் கோலி, முன்னேறும் ஸ்மித்!
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட விராட் கோலி, முன்னேறும் ஸ்மித்!
“ரன்கள் குவிக்கத் தொடங்கினால் பிரித்வி ஷா மிகவும் ஆபத்தானவர்” - விராட் கோலி!
“ரன்கள் குவிக்கத் தொடங்கினால் பிரித்வி ஷா மிகவும் ஆபத்தானவர்” - விராட் கோலி!
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
“சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்களை இந்திய அணி செய்யவில்லை” - க்ரேக் மெக்மில்லன்
“சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்களை இந்திய அணி செய்யவில்லை” - க்ரேக் மெக்மில்லன்
“அணி தேர்வு அர்த்தமற்றது” - நியூசிலாந்துடனான தோல்விக்கு பின் கபில் தேவ்!
“அணி தேர்வு அர்த்தமற்றது” - நியூசிலாந்துடனான தோல்விக்கு பின் கபில் தேவ்!
Advertisement