தோனியின் சாதனையை முறியடித்த கோலி... டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்!

Updated: 03 September 2019 11:54 IST

கேப்டனாக தான் வென்றதை குறைத்து கொண்டு, இது ஒரு கூட்டு முயற்சி என்று போட்டி முடிந்து பேசிய விராட் கோலி கூறினார். பெயருக்கு முன்பு "C" மட்டுமே எனக்கு உள்ளது.

Virat Kohli Downplays Achievement Of Most Test Wins As India Captain
அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். © AFP

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை விராட் கோலி சிறப்பான முறையில் தொடங்கி வைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்கடித்து, அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அனைத்து தளத்திலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளதுட்டுள்ளது. இளம் வீரர் ஹனுமன் விஹாரி மற்றும் பந்து வீச்சாளர்கள் போட்டியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். கேப்டனாக தான் வென்றதை குறைத்து கொண்டு, இது ஒரு கூட்டு முயற்சி என்று போட்டி முடிந்து பேசிய விராட் கோலி கூறினார். பெயருக்கு முன்பு "C" மட்டுமே எனக்கு உள்ளது.

"என் பெயருக்கு முன்னால் "C" என்ற எழுத்து மட்டுமே உள்ளது. இதில் கூட்டு முயற்சி தான் வெற்றி பெற செய்தது. சாம்பியன்ஷிப்பை சிறப்பாக தொடங்கியுள்ளோம். முன்பு நடந்த எல்லாமே இதற்கு சம்மந்தம் இல்லாதது," என்றார் கோலி.

மேற்கிந்திய தீவுகள் குறித்து பேசிய கோலி, அவர்கள் இந்தப் போட்டி அனுபவமாக இருக்கும், அடுத்த போட்டிகளில் அவர்கள் முன்னேற வாய்ப்புள்ளது. பந்துவீச்சை பொருத்த வரையில், மேற்கிந்திய தீவுகள் சிறப்பாக ஆடுகின்றனர் என்றார்.

"சிறப்பான கிரிக்கெட்டை தொடர எதிர்நோக்கியுள்ளோம். எந்தெந்த இடத்தில் அணியை சரி செய்ய வேண்டும் என்று மேற்கிந்தித தீவுகள் சரி பார்க்க வேண்டியுள்ளது. பவுலிங் பொருத்த வரையில் அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்," என்றார்.

"ஜேசன் மற்றும் கெமர் ஆகியோர் அவர்களுக்கு சிறந்த பந்து வீச்சாளர்களாக இருக்கின்றனர். சிவப்பு பந்தைக் கொண்டு அவர்களின் பந்துவீச்சு ஆபத்தானது. அவர்கள் அதிகபடியான ரன்கள் குவித்தால், எதிரணிக்கு கடினமான போட்டியாக மாற வாய்ப்புள்ளது," என்றார்.

கேப்டனாக கோலி அடுத்து, இந்தியாவில் நடந்தவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளில் ஆடவுள்ளார். அது வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • என் பெயருக்கு முன்னால் "C" என்ற எழுத்து மட்டுமே உள்ளது: கோலி
  • அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற இந்திய கேப்டனானார் விராட் கோலி
  • மேற்கிந்திய தீவுகள் குறித்து தன்னுடைய கருத்தை கூறினார் கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
Advertisement