"டெஸ்ட் வெற்றி கேரள மக்களுக்கு சமர்ப்பணம்" - கேப்டன் கோலி நெகிழ்ச்சி

Updated: 22 August 2018 17:04 IST

இந்த வெற்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக இந்திய அணி கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்

Virat Kohli Dedicates Trent Bridge Win To Kerala Flood Victims

ட்ரென்ட் பிரிட்ஜில் நடந்த இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக இந்திய அணி கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியை 203 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெஸ்ட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா. இந்த போட்டியில், விராத் கோலி (97,103) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று கோலி தெரிவித்துள்ளார். மேலும், மூன்றாவது டெஸ்ட் போட்டியை காண வந்து, தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இந்திய அணி சிறப்பான வெற்றியின் மூலம் மீண்டும் தொடரில் தன்னை நிலை நிறுத்தியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2 போட்டிகளும் இந்தியா ஒரு போட்டியிலும் வென்றுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கின்றன. இந்தியா- இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி சவுத்ஹாம்டனில் நடைப்பெற உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
Advertisement