"சச்சின், லாராவை விட கோலி சிறந்தவர்" - இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!

Updated: 09 March 2019 14:28 IST

சர்வதேச போட்டிகளில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் கோலி 41 சதங்க‌ளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சச்சின் 49 சதங்க‌ளுடன் உள்ளார்.

Virat Kohli Better Than Sachin Tendulkar, Brian Lara? Ex-England Captain Makes Big Statement
சச்சின் டெண்டுல்கரை விட 8 சதங்கள் பின் தங்கியுள்ளார் விராட் கோலி. © AFP

விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் நேற்று தனது 41வது சதத்தை நிறைவு செய்தார். ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுடனான 3வது ஒருநாள் போட்டியில் 314 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கோலி 95 பந்துகளில 123 ரன்கள் குவித்தார். இதனையடுத்து ட்விட்டரில் யார் சிறந்த ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன் என்ற விவாதம் எழுந்தது.

இதற்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் ''கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' என பொருள்படும்  GOAT-ஐ குறிக்க ஆட்டின் படத்தை எமோஜியாக பதிவிட்டு விராட் என்று கூறினார். பின்னர் இன்னொருவர் செய்த ட்விட்டான ''சச்சின், லாராவை விட விராட் சிறந்தவர்'' என்ற ட்விட்டுக்கு "ஆம்" என பதிலளித்துள்ளார். 

விராட் கோலி 225 போட்டிகளில் 41 சதங்களை அடித்துள்ளார். உலகில் இந்த வேகத்தில் யாருமே சதமடித்ததில்லை. இவருக்கு அடுத்த இடத்தில் ஆம்லா 174 போட்டிகளில் 27 சதம் அடித்ததே அதிவேகமாக உள்ளது. 

225 போட்டிகளில் யார் அதிக சதம் அடித்துள்ளார்கள் என்று பார்த்தால் டிவில்லியர்ஸ் 25 சதமும், சச்சின் 23 சதமிம் அடித்துள்ளனர். ஆனால் கோலி இவர்களைவிட எட்டாத உயரத்தில் உள்ளார். 

இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 41வது சதத்தை நேற்று நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடிக்கும் 8வது சதமாகும். 2019ல் மட்டும் தனது 3வது சதத்தை நிறைவு செய்துள்ளார். அதில் இரண்டு இந்தியாவில் அடிக்கப்பட்டது.

கேப்டனாக 4000 ரன்களை அதிவேகமாக கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். முன்னதாக இந்த சாதனையை தோனி, அசாருதீன் மற்றும் கங்குலி ஆகியோர் செய்திருந்தனர். நேற்றைய போட்டியில் 27 ரன்கள் எடுத்திருந்த போது இந்த சாதனையை படைத்தார். 66 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள கோலி கேப்டனாக 19 சதங்களை அடித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் கோலி 41 சதங்க‌ளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சச்சின் 49 சதங்க‌ளுடன் உள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 41வது சதத்தை நேற்று நிறைவு செய்தார்
  • மைக்கல் வாகன் விராட் கோலியை GOAT என்று குறிப்பிட்டார்
  • விராட் கோலி சதம் அடித்தும் இந்தியா 32 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
Advertisement