டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!

Updated: 19 September 2019 17:11 IST

சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சின் பந்தை அடிக்க நேராக தவான் களத்தில் இறங்கினார். தவானின் திட்டத்தை கெடுக்கும் வகையில் மில்லர் நீண்டு தூரம் ஓடி அந்தப் பந்தை பிடித்து அவரை அவுட் ஆக்கினார்.

Virat Kohli Awestruck By David Miller Catch. Reaction Goes Viral On Internet
அவுட்டான தவான் முகத்தில் வறண்ட புன்னகையுடன் வெளியேறினார். © Twitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், குயின்டன் டி காக்கை அவுட் ஆக்க, நவ்தீப் சைனி பந்து வீச இந்திய கேப்டன் விராட் கோலி பின்னோக்கி சென்று ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார். ட்விட்டரில் விராட் கோலியின் கேட்ச் விரைவில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது, டேவிட் மில்லர் பிசிஏ மைதானத்தில் இந்தியா 150 ரன்களை துரத்த வந்தபோது குறிப்பிடத்தக்க ஒற்றை கை டைவிங் கேட்சை எடுத்தார். டெவிட் மில்லரின் கேட்ச்சிலிருந்து ரசிகர்கள் வெளிவருவதற்கு முன்பாக, விராட் கோலியின் ரியாக்‌ஷன் இணையம் முழுவதும் பரவ தொடங்கியது.

நான்காவது ஓவருக்கு இந்தியா தொடக்க வீரரான ரோஹித் ஷர்மாவை 12 ரன்களுக்கு இழந்தது. விராட் கோலி, ஷிகர் தவானுடன் இணைந்து ஆட களமிறங்கினார். இருவரும் இணைந்து 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் தவான், மில்லர் கேட்ச் பிடிக்க அவுட் ஆனார். 

சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சின் பந்தை அடிக்க நேராக தவான் களத்தில் இறங்கினார். தவானின் திட்டத்தை கெடுக்கும் வகையில் மில்லர் நீண்டு தூரம் ஓடி அந்தப் பந்தை பிடித்து அவரை அவுட் ஆக்கினார்.

அந்த கேட்ச்சை பார்த்த தவான் முகத்தில் வறண்ட புன்னகையுடன் வெளியேறினார். கோலியும் கேட்சைப் பார்த்ததும் திகைத்துப் பார்த்தார்.

"அது ஒரு நம்ப முடியாத கேட்ச். விராட்டும் அதையே தான் நினைத்தார். நான் சிரித்துக்கொண்டே அவரின் முயற்சியை பாராட்டினேன். அந்தப் பந்தை நான் உயரமாக அடிக்கவில்லை. ஆனால், பலமாக அடித்தேன்," என்று போட்டிக்கு பின் தவான் கூறினார்.

இரண்டாவது டி20 போட்டியை இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் டி20 போட்டி மழை காரணத்தால் கைவிடப்பட்டது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் ஒரு "முக்கிய நிகழ்வு" - விராட் கோலி!
இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் ஒரு "முக்கிய நிகழ்வு" - விராட் கோலி!
'மை பார்ட்னர் இன் கிரைம்' - கோலியின் அந்த பார்ட்னர் யார்?
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
Advertisement