“12வது இடத்தில் ஆடினாலும் சதமடிப்பார்” - ராகுலை புகழ்ந்த ஷிகர் தவான்!

Updated: 12 February 2020 17:26 IST

5வது இடத்தில் ஆடிய கே.எல்.ராகுல், நியூசிலாந்துக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

KL Rahul Can Score Century Even As 12th Man, Says Shikhar Dhawan
ஷிகர் தவான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கே.எல்.ராகுலை புகழ்ந்தார். © Instagram

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் கே.எல்.ராகுல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கே.எல்.ராகுல் 112 ரன்கள் குவித்தார். தொடரில் மொத்தமாக 204 ரன்கள் குவித்த அவரை பாராட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், கே.எல். ராகுல் 12வது இடத்தில் ஆடினாலும் சதமடிப்பார், அவர் அப்படி ஒரு ஃபாமில் இருக்கிறார் என்றார். “சிறப்பாக ஆடினீர்கள் மற்றும் அற்புதமான சதம் ப்ரோ, இப்படியே தொடருங்கள். நீங்கள் விளையாடுவதை பார்த்தால், 12வது இடத்தில் கூட சதமடிப்பீர்கள்,” என்று தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறினார்.

9dg94hhg

சில மாதங்கள் முன்பு, தொடக்க இடத்தில் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து போட்டியை யார் தொடங்குவார்கள் என்ற பிரச்னை இருந்தது. தொடக்க வீரராக இருந்த கே.எல். ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் கொடுக்கப்பட்டது மற்றும் மிடில் ஆர்டரில் பேட் செய்ய அறிவுறுத்தப்பட்டார். இதற்கிடையில், ஷிகர் தவான் காயம் ஏற்பட்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்து விலகினார். 

காயம் காரணமாக விலகியிருந்த தவானுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால், கர்நாடகாவை சேர்ந்த வலதுகை பேட்ஸ்மேன், மிடில் ஆர்டரிலும் தன்னுடைய ஆட்டத்தை விட்டுகொடுக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக ஆடினார். ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 5-0 என்று இந்தியா வெல்ல பெரிதும் உதவியாக இருந்தார். ஒருநாள் போட்டியிலும் தன்னுடைய பங்களிப்பு இருந்த போதிலும், இந்தியா தொடரை இழந்தது.

Comments
ஹைலைட்ஸ்
  • நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாளில் கே.எல்.ராகுல் சதமடித்தார்
  • கே.எல்.ராகுலை தனது இன்ஸ்டாகிராம் கதையில் ஷிகர் தவான் பாராட்டினார்
  • 12வது இடத்தில் ஆடினாலும் அவர் சதமடிப்பார் என்றார் ஷிகர் தவான்
தொடர்புடைய கட்டுரைகள்
“12வது இடத்தில் ஆடினாலும் சதமடிப்பார்” - ராகுலை புகழ்ந்த ஷிகர் தவான்!
“12வது இடத்தில் ஆடினாலும் சதமடிப்பார்” - ராகுலை புகழ்ந்த ஷிகர் தவான்!
“ஏப்ரல் மாதம் பார்த்துகொள்ளலாம்” - ஜிம்மி நீஷமின் சவாலுக்கு பதிலளித்த கே.எல்.ராகுல்!
“ஏப்ரல் மாதம் பார்த்துகொள்ளலாம்” - ஜிம்மி நீஷமின் சவாலுக்கு பதிலளித்த கே.எல்.ராகுல்!
கே.எல்.ராகுலுடன் வேடிக்கையான படத்தை வெளியிட்ட ஜிம்மி நீஷம்!
கே.எல்.ராகுலுடன் வேடிக்கையான படத்தை வெளியிட்ட ஜிம்மி நீஷம்!
கே.எல். ராகுலின் 360 டிகிரி’ பேட்டிங்கை பாராட்டிய சஞ்சய் மஞ்ச்ரேகர்
கே.எல். ராகுலின் '360 டிகிரி’ பேட்டிங்கை பாராட்டிய சஞ்சய் மஞ்ச்ரேகர்
“கே.எல். ராகுல் இந்தியாவின் சொந்த ஸ்விஸ் கத்தி” - பாராட்டிய முன்னாள் வீரர்
“கே.எல். ராகுல் இந்தியாவின் சொந்த ஸ்விஸ் கத்தி” - பாராட்டிய முன்னாள் வீரர்
Advertisement