கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பகிர்ந்த ஆன்ட்ரூ ரஸலின் உருவமாதிரி!

Updated: 13 February 2019 17:09 IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்க வைத்துள்ள 13 வீரர்களில் ரஸலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2019: KKR Share A Picture Of Andre Russell
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் ஆன்ட்ரூ ரஸல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரராக மாறியுள்ளார். © AFP

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் ஆன்ட்ரூ ரஸல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரராக மாறியுள்ளார். ஐபிஎல் தொடரில் ரஸலின் அதிரடி ஆட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். சமீபத்தில், ரஸலைப் போலவே உருவம் கொண்ட 'மிஸ்டர் டி' நடித்த க்ளப்பர் லாங் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.

அந்த பதிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி "எப்படி க்ளப்பர் லாங் பாக்ஸிங் ரிங்கில் மற்றவர்களை பயப்பட வைப்பாரோ அதே போல் ரஸல் பந்து வீச்சாளர்களை பயப்பட வைப்பார்" என்று கூறியுள்ளது.

30 வயதான ரஸல் 50 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். 26.96 என்ற சராசரியுடன் 890 ரன்கள் குவித்துள்ளார். இதில் 88 என்ற அதிகபட்ச ஸ்கோரும் அடங்கும்.

ரஸல் சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவர். இதுவரை ஐபிஎல் தொடரில் 65 பவுண்டரிகளையும், 68 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்க வைத்துள்ள 13 வீரர்களில் ரஸலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 47 போட்டிகளில் ஆடி 465 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த ஆண்டு ஆன்ட்ரூ ரஸலை தக்கவைத்துள்ளது
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரராக மாறியுள்ளார் ரஸல்
  • 30 வயதான ரஸல் 50 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் விலகல்!!
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் விலகல்!!
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
2019 உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!
2019 உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!
கொல்கத்தாவை ஈடன் கார்டனில் மிரட்டுமா சி.எஸ்.கே?
கொல்கத்தாவை ஈடன் கார்டனில் மிரட்டுமா சி.எஸ்.கே?
Advertisement