"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" களத்துக்கு திரும்பும் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்!

Updated: 14 February 2019 12:39 IST

2011 உலகக் கோப்பைக்கு பின் ஓய்வை அறிவித்த அக்தர். கிரிக்கெட் வர்ணனையாளராக தனது வாழ்க்கையை தொடர்ந்தார்.

Shoaib Akhtar Announces
அக்தர் 178 டெஸ்ட் விக்கெட்டுகளையும், 247 ஒருநாள் போட்டி விக்கெட்டுகளையும், 19 டி20 போட்டி விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். © AFP

பாகிஸ்தான் அணியின் முன்னாள வீரர் சோயிப் அக்தர், பிப்ரவரி 14ம் தேதியன்று மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பவுள்ளார். "இன்று உள்ள குழந்தைகளுக்கு கிரிக்கெட் பற்றி நிறைய தெரியும் என்று நினைக்கிறார்கள். அதனால் நான் திரும்ப வந்து உண்மையான வேகப்பந்து வீச்சு என்றால் என்ன என்று காட்டுகிறேன். எச்சரிக்கையாக இருங்கள். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இணைகிறேன்" என்று ட்விட் செய்துள்ளார் அக்தர்.

இதனை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்கள் பலரும் ஆர்வமாக ரீ-ட்விட் செய்து வருகின்றனர். 

பிப்ரவரி 14 துவங்கவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் உள்ள ஆறு அணிகளில் ஒரு அணியில் அக்தர் இணைவார் என்று கூறப்படுகிறது.

இந்த வீடியோ ட்விட்டுக்கு, முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் மற்றும் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாசிம் அக்ரம் தனது ட்விட்டில் " நிஜமாகவே அணிக்கு திரும்புகிறாயா?" இன்று சில சிறுவர்கள் உனது உத்திகளை பயன்படுத்துகிறார்கள் என்றும், மாலிக் தனது ட்விட்டில் லெஜெண்ட் மீண்டும் களத்துக்கு திரும்புகிறார் என்றும் கூறியிருந்தனர்.

2011 உலகக் கோப்பைக்கு பின் ஓய்வை அறிவித்த அக்தர். கிரிக்கெட் வர்ணனையாளராக தனது வாழ்க்கையை தொடர்ந்தார்.

அக்தர், 178 டெஸ்ட் விக்கெட்டுகளையும், 247 ஒருநாள் போட்டி விக்கெட்டுகளையும், 19 டி20 போட்டி விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கிரிக்கெட் உலகில் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்டவர்.

Comments
ஹைலைட்ஸ்
  • சோயிப் அக்தர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பவுள்ளார்
  • பிப்ரவரி 14 துவங்கவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அக்தர் இணைவார்
  • வாசிம் அக்ரம் மற்றும் சோயிப் மாலிக் இருவரும் அக்தருக்கு பதிலளித்துள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"இந்து என்பதால் டேனிஷ் கனேரியாவை மோசமாக நடத்தினர்" - சோயிப் அக்தர்!
"இந்து என்பதால் டேனிஷ் கனேரியாவை மோசமாக நடத்தினர்" - சோயிப் அக்தர்!
"யார் திறமையானவர்கள் என்று இந்தியா நிரூபித்தது" - சோயிப் அக்தர்
"யார் திறமையானவர்கள் என்று இந்தியா நிரூபித்தது" - சோயிப் அக்தர்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
Advertisement