Listen to the latest songs, only on JioSaavn.com
 

“அட யாருப்பா நீ?” - கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வேடிக்கையான வீடியோ!

Updated: 04 April 2020 18:44 IST

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நகைச்சுவையான வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

Kevin Pietersen Shares Hilarious Video, Leaves Fans In Splits. Watch
கெவின் பீட்டர்சன் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். © Instagram

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நகைச்சுவையான வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒருவர் முழு கிரிக்கெட் உடை அணிந்து, ஒரு டிஃபென்ஸ் ஷாட் ஆடி பிறகு சிங்கிள் ரன் எடுப்பதற்கு த்ரெட்மில்லில் ஓடுகிறார். “இது யாராக இருந்தாலும்,... ஜீனியஸ்! இதை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்,” என்று கெவின் பீட்டர்சன் அந்த வீடியோவுக்கு தலைப்பிட்டார். கெவின் பீட்டர்சன் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் லைவ் சேட்டில் உரையாடினார்.

கடந்த வியாழக்கிழமை, பீட்டர்சன் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டனும், இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலியுடன் இன்ஸ்டாகிராம் லைவில் உரையாடினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக லாக்டவுன் பற்றி விவாதிப்பதன் மூலம் இருவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உரையாடலைத் தொடங்கினர்.

பீட்டர்சன் கோலியிடம் “சிக்கு” என்ற புனைபெயரை எங்கிருந்து பெற்றார் என்று கேட்டார், இந்திய கேப்டன், “ரஞ்சி டிராபியில் ஒரு பயிற்சியாளரிடமிருந்து இந்த புனைபெயர் எனக்குக் கிடைத்தது. அப்போது எனக்குப் பெரிய கன்னங்கள் இருக்கும். 2007ம் ஆண்டு எனக்கு முடி உதிர்வதாக எண்ணினேன். அதனால், என்னுடைய முடியைக் குறைத்தேன், அப்போது என்னுடைய கன்னங்களும், காதுகளும் தனியாகத் தெரிய ஆரம்பித்தது. இந்த பெயர் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்திடமிருந்து பெற்றேன். ‘சம்பக்' என்ற புத்தகத்தில் முயலின் பெயர்,” என்றார்.

கொரோனா வைரஸ் தொற்று விளையாட்டு உலகத்தை அனைத்து போட்டிகளையும் ரத்து செய்ய வைத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக், விம்பிள்டன், யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் மற்றும் பிற முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் ஆபத்தான வைரஸ் பாதிப்பால், ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன.

இப்போதைக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக” ஐபிஎல் தொடக்கமானது மார்ச் 29 முதல் ஏப்ரல் 15 வரை ஒத்துவைக்கப்பட்டுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • கெவின் பீட்டர்சன் இன்ஸ்டாகிராமில் ஒரு வேடிக்கையான வீடியோவை வெளியிட்டார்
  • வியாழக்கிழமை, பீட்டர்சன் ஆர்சிபி அணியின் கேப்டன் கோலியுடன் உரையாடினார்
  • “சிக்கு” என்ற புனைப்பெயரை எங்கிருந்து பெற்றார் என்பதை கோலி கூறினார்
தொடர்புடைய கட்டுரைகள்
“கோலிக்கு மிக அருகில் கூட ஸ்மித்தை ஒப்பிட முடியாது” - கெவின் பீட்டர்சன்!
“கோலிக்கு மிக அருகில் கூட ஸ்மித்தை ஒப்பிட முடியாது” - கெவின் பீட்டர்சன்!
“பைத்தியக்கார தனம்” - சமூக விலகலை பின்பற்றாதவர்களின் வீடியோ பகிர்ந்த பீட்டர்சன்!
“பைத்தியக்கார தனம்” - சமூக விலகலை பின்பற்றாதவர்களின் வீடியோ பகிர்ந்த பீட்டர்சன்!
தமிழ்ப் பாடலுக்கு டிக்டாக் செய்த கெவின் பீட்டர்சன்... வீடியோபகிர்ந்த ஏ.ஆர். ரகுமான்!
தமிழ்ப் பாடலுக்கு டிக்டாக் செய்த கெவின் பீட்டர்சன்... வீடியோபகிர்ந்த ஏ.ஆர். ரகுமான்!
“ஏங்க... அந்த வெள்ளை முடி...” - கோலியைப் பங்கமாகக் கலாய்த்த பீட்டர்சன்!
“ஏங்க... அந்த வெள்ளை முடி...” - கோலியைப் பங்கமாகக் கலாய்த்த பீட்டர்சன்!
கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வீடியோ... வேடிக்கையாக கமெண்ட் செய்த யுவராஜ் சிங்!
கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வீடியோ... வேடிக்கையாக கமெண்ட் செய்த யுவராஜ் சிங்!
Advertisement