"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!

Updated: 19 September 2019 14:50 IST

புதன்கிழமை மொகாலியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், விராட் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அசத்தினார்.

Virat Kohli A "Great Player", Says Shahid Afridi After Indian Captain
விராட் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அசத்தினார். © AFP

புதன்கிழமை மொகாலியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், விராட் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தியாவுக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. விராட் கோலி இந்தியாவின் வெற்றியின் போது பல மைல்கற்களை எட்டினார். ஏனெனில் அவர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை பெற்றார். டி20 போட்டியில் அவர், 2,441 ரன்கள் குவித்துள்ளார். இதில் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் அவர் 22 அரைசதங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

30 வயதான பேட்ஸ்மேன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மீண்டும் மூன்று வடிவங்களிலும் சராசரியாக 50க்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, விராட் கோலியை பாராட்டி, "சிறந்த வீரர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐசிசியின் ட்விட்டுக்கு ரீ-ட்விட் செய்த அப்ரிடி, "வாழ்த்துக்கள் @imVkohli நீங்கள் ஒரு சிறந்த வீளையாட்டு வீரர். தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். உலகத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்யுங்கள்." என்று பதிவிட்டார்.

விராட் கோலியின் சாதனைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ஐசிசி, "டெஸ்ட்: 53.14, ஒருநாள்: 60.31 டி20: 50.85 விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் சராசரி 50ஐ தாண்டியுள்ளார்."

ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்து விராட் கோலி டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மூன்று வடிவங்களிலும் சராசரியாக 50க்கு மேல் உள்ள ஒரே சமகால பேட்ஸ்மேன் இவர்தான். 

150 ரன்களை துரத்திய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு விராட் கோலி ஷிகர் தவானுடன் இணைந்து 61 ரன்கள் குவித்தார்.

31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த தவான், டேவிட் மில்லரின் அற்புதமான கேட்சில் அவுட் ஆனார்.

அதன்பின் கோலி ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து ஆட்டத்தை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி பெங்களூருவில் செப்டம்பர் 22ம் தேதி நடக்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Advertisement