”சண்டையிட யாருக்கும் உரிமை இல்லை” - யு19 இறுதிப் போட்டி சம்பவம் குறித்து கபில் தேவ்!

Updated: 14 February 2020 16:45 IST

ஐசிசி நடத்தை விதிமுறைகளை லெவல் 3 மீறியதாக மூன்று பங்களாதேஷ் வீரர்கள் மற்றும் இரண்டு இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Kapil Dev On "Horrible" U-19 World Cup Final Scuffle: "No Right To Fight"
19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையே பதற்றம் அதிகமாக இருந்தது. © AFP

இந்திய கிரிக்கெட் லெஜண்ட் கபில் தேவ், யு 19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வளர்ந்து வரும் வீரர்களுக்கு இடையே கைகலப்பு  நடந்த சம்பவத்தை முறையற்றது என்றார். 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன் பிசிசிஐக்கு தவறான கிரிக்கெட் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்று யார் சொல்வது? இது ஜென்டில்மேன் விளையாட்டாக முன்பு இருந்தது!" 1983ம் ஆண்டு உலகக் கோப்பை வென்றது கபில் தேவ் வழிநடத்திய அணி.

முதல்முறையாக உலகக் கோப்பையை வென்ற பங்களாதேஷ் அணியில், ஐசிசி நடத்தை விதிமுறைகளை லெவல் 3 மீறியதாக தோஹித் ஹிர்தோய், ஷமிம் ஹொசைன் மற்றும் ராகிபுல் ஹசன் ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர்.  அதே நேரத்தில் இந்தியர்கள் ஆகாஷ் சிங் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. 

"அந்த இளைஞர்களிடையே நடந்தது பயங்கரமானது என்று நான் கருதுகிறேன். கிரிக்கெட் வாரியங்கள் இன்று கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இதனால் நாளை இந்த வகையான தவறுகள் நடக்காது,” என்று கபில் தேவ் ஒரு நிகழ்ச்சியில் கூறினார். யு 19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடந்ததை சுட்டுக்காட்டி அவர் பேசினார்.

"நீங்கள் போட்டியில் தோற்று மீண்டும் மைதானத்திற்குச் சென்று யாருடனும் சண்டையிட உங்களுக்கு உரிமை இல்லை. திரும்பி வாருங்கள். கேப்டன், மேலாளர் மற்றும் வெளியே அமர்ந்திருந்த மக்கள் ஆகியோர் மீது நீங்கள் பழி சுமத்த வேண்டும். சில நேரங்களில், 18 வயதாக இருக்கும் அவருக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், மேலாளர் ஆகிய உங்களுக்கு நிலைமையை புரிந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்,” என்றார்.

இறுதிப் போட்டியில் இந்தியாவை வென்ற பின்னர் பங்களாதேஷ் வீரர்கள் சிலர் கொண்டாட்டத்துடன் வெளியேறினர். "எதிர்பார்க்காத சம்பவத்துக்கு" அவகளுடைய கேப்டன் அக்பர் அலி மன்னிப்பு கேட்டாலும், இந்திய கேப்டன் பிரியாம் கார்க் இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது என்று வருந்தினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
”சண்டையிட யாருக்கும் உரிமை இல்லை” - யு19 இறுதிப் போட்டி சம்பவம் குறித்து கபில் தேவ்!
”சண்டையிட யாருக்கும் உரிமை இல்லை” - யு19 இறுதிப் போட்டி சம்பவம் குறித்து கபில் தேவ்!
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் அன்பின் வெளிப்பாடு... வைரலாகும் வீடியோ!
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் அன்பின் வெளிப்பாடு... வைரலாகும் வீடியோ!
"டெண்டுல்கரை யாரும் நெருங்க மாட்டார்கள் என்று நினைத்தேன்" - கோலியை பாராட்டிய கபில் தேவ்
"டெண்டுல்கரை யாரும் நெருங்க மாட்டார்கள் என்று நினைத்தேன்" - கோலியை பாராட்டிய கபில் தேவ்
"ரவி சாஸ்திரியின் நியமனம் கேலிக்கூத்தாக உள்ளது" - பிசிசிஐயை விமர்சிக்கும் ரசிகர்கள்!
"ரவி சாஸ்திரியின் நியமனம் கேலிக்கூத்தாக உள்ளது" - பிசிசிஐயை விமர்சிக்கும் ரசிகர்கள்!
பெயரில் எழுத்துப்பிழை... கடுமையாக விமர்சிக்கப்படும் சி.ஏ.சி!
பெயரில் எழுத்துப்பிழை... கடுமையாக விமர்சிக்கப்படும் சி.ஏ.சி!
Advertisement