நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள்: வில்லியம்சனுக்கு மூன்று விருதுகள்!

Updated: 22 March 2019 11:19 IST

கேன் வில்லியம்சனுக்கு நியூசிலாந்தின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதும், ரெட்பாத் கோப்பைக்கான விருதும் வழங்கப்பட்டது.

Kane Williamson Named Player Of The Year At New Zealand Cricket Awards
வில்லியம்சன் அனைத்து வடிவிலான போட்டியிலும் கலக்கி வருகிறார் என்று ஐசிசி புகழ்ந்துள்ளது. © AFP

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு நியூசிலாந்து கிரிக்கெட்டின் 'சர் ரிச்சர்ட் ஹாட்லி' பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நியூசிலாந்தின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதும், ரெட்பாத் கோப்பைக்கான விருதும் வழங்கப்பட்டது. இவர் மட்டுமின்றி ராஸ் டெய்லர், போல்ட் மற்றும் காலின் முன்ரோ ஆகியோரும், பெண்கள் அணியின் அமெலியா கெர் ஆகியோரும் விருதுகளை பெற்றனர். வில்லியம்சன் அனைத்து வடிவிலான போட்டியிலும் கலக்கி வருகிறார் என்று ஐசிசி புகழ்ந்துள்ளது.

இவரது தலைமையில் நியூசிலாந்து டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்தது. இந்த சீசனில் 89 சராசரியுடன் 801 ரன்கள் குவித்துள்ளார்.

வில்லியம்சன்னை போலவே 18 வயதான பெண்கள் அணி வீராங்கனை கெர்ரும் மூன்று விருதுகளை வென்றார். ஒருநாள் போட்டிகளில் சிறந்த நியூசிலாந்து பெண் வீராங்கனை, ஃபைல் ப்ளாக்லெர்  கோப்பையின் சிறந்த பந்துவீச்சாளர், வீனஸ் கோப்பையின் சிறந்த வீராங்கனை ஆகிய விருதுகளை வென்றார்.

கெர், இந்த சீசனில் 415 ரன்களை குவித்துள்ளார். இதில் பெண்கள் கிரிக்கெட்டின் உலக சாதனையான 232 என்ற தனிநபர் அதிகபட்சம் கெர் உடையதுதான்.

டெய்லர் 2018ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரராகவும், முன்ரோ சிறந்த டி20 வீரராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

ட்ரெண்ட் போல்ட்டுக்கு இந்த சீசனில் 35 விக்கெட்களை வீழ்த்தியதற்காக விண்ட்ஸர் சிறந்த பந்துவீச்சாளர் விருது வழங்கப்பட்டது.

Comments
ஹைலைட்ஸ்
  • வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து டெஸ்ட் தரவரிசையில் 2ம் இடம் பிடித்தது
  • இந்த சீசனில் 89 சராசரியுடன் 801 ரன்கள் குவித்துள்ளார் வில்லியம்சன்
  • ராஸ் டெய்லர், போல்ட் மற்றும் காலின் முன்ரோ ஆகியோரும் விருது பெற்றுள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
"இது கிரிக்கெட் அல்ல" - உலகக் கோப்பை பவுண்டரி விதி குறித்து கேன் வில்லியம்சன்!
"இது கிரிக்கெட் அல்ல" - உலகக் கோப்பை பவுண்டரி விதி குறித்து கேன் வில்லியம்சன்!
"கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருவரையும் பின்பற்றுவேன்" - பாபர் அசாம்!
"கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருவரையும் பின்பற்றுவேன்" - பாபர் அசாம்!
காயம் காரணமாக வெளியேறிய கேன் வில்லியம்... கேப்டனான டிம் சவுதி!
காயம் காரணமாக வெளியேறிய கேன் வில்லியம்... கேப்டனான டிம் சவுதி!
பிறந்தநாளுக்கு கேக் கொண்டு வந்த இலங்கை ரசிகர்கள்... நெகிழ்ந்த வில்லியம்சன்!
பிறந்தநாளுக்கு கேக் கொண்டு வந்த இலங்கை ரசிகர்கள்... நெகிழ்ந்த வில்லியம்சன்!
என்னை விட வில்லியம்சன் தான் பெஸ்ட் - பென் ஸ்டோக்ஸ் புகழாரம்
என்னை விட வில்லியம்சன் தான் பெஸ்ட் - பென் ஸ்டோக்ஸ் புகழாரம்
Advertisement