Listen to the latest songs, only on JioSaavn.com
 

“பந்துடன் அச்சுறுத்தலாக இருப்பார் பும்ரா” - கேன் வில்லியம்சன்

Updated: 12 February 2020 12:43 IST

நம்பர் ஒன் பந்துவீச்சாளர் பும்ரா ஒரு தொடரை ஒரு விக்கெட் கூட இல்லாமல் முடித்தது இதுவே முதல்முறை.

Kane Williamson Backs Out-Of-Form Jasprit Bumrah
ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை பும்ரா. © AFP

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான ஒருநாள் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயலபடவில்லை. நம்பர் ஒன் பந்துவீச்சாளர் பும்ரா ஒரு தொடரை ஒரு விக்கெட் கூட இல்லாமல் முடித்தது இதுவே முதல்முறை. இந்தத் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. இருப்பினும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டினார், பும்ரா எப்போதும் பந்தைக் கொண்டு பேட்ஸ்மேனை அச்சுறுத்துவார் என்று கூறினார். “அனைத்து வடிவங்களிலும் பும்ரா உலகின் சிறந்த பவுலர் என்பது அனைவரும் அறிந்ததே,” என்று கேன் வில்லியம்சன் மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்ற பிறகு கூறினார்.

“அவர் கையில் பந்து வைத்திருக்கும் போது அச்சுறுத்தால இருக்கும். ஆனால், அவரை குறித்த பல விஷயங்கள் உள்ளன. கொஞ்ச நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் சிறப்பாக பந்து வீசுகிறார்.” என்றார் வில்லியம்சன்.

காயத்துக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா டி20 போட்டியில் சிறப்பாக விளையாடினார். அதில் சிறந்ததாக 3/12 என்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

பும்ராவைப் போலவே விராட் கோலியும் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை. இவர்கள் இருவரும் வரவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கம்பேக் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா ஒரு விக்கெட் எடுக்கவில்லை
  • பும்ரா பந்துடன் அச்சுறுத்தலாக இருப்பார் என்றார் கேன் வில்லியம்சன்
  • "அவர் இடைவேளைக்கு பிறகு மீண்டும் விளையாட்டுக்கு திரும்பியுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
ஐசிசி தரவரிசையில் கோலி நம்பர் 1, பும்ரா முதலிடத்தை தவறவிட்டார்!
ஐசிசி தரவரிசையில் கோலி நம்பர் 1, பும்ரா முதலிடத்தை தவறவிட்டார்!
“பந்துடன் அச்சுறுத்தலாக இருப்பார் பும்ரா” - கேன் வில்லியம்சன்
“பந்துடன் அச்சுறுத்தலாக இருப்பார் பும்ரா” - கேன் வில்லியம்சன்
டி20 தரவரிசை: அதிரடியான ஆட்டத்துக்கு பின் 2வது இடத்தைப் பிடித்த கே.எல்.ராகுல்!
டி20 தரவரிசை: அதிரடியான ஆட்டத்துக்கு பின் 2வது இடத்தைப் பிடித்த கே.எல்.ராகுல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
Advertisement