உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு உயிரிழந்த ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர்!

Updated: 18 July 2019 12:51 IST

நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கோர்டன், உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் போது உயிரிழந்தார்.

Jimmy Neesham
ஜிம்மி நீசம் சூப்பர் ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்தார். © AFP

நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கோர்டன், உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் போது உயிரிழந்தார். இங்கிலாந்து அணி உலகக் கோப்பையில் முதல் வெற்றியை கண்டுள்ளது. நியூசிலாந்து இங்கிலாந்து ஆடிய போட்டி டையானது. பின்னர் சூப்பர் ஓவரிலும் இரு அணிகள் 15 ரன்கள் எடுத்து, அந்த போட்டியும் டையானதால், ஐசிசியின் பவுண்டரி விதி வைத்து இங்கிலாந்தை வெற்றி பெற்ற அணியாக அறிவித்தது. கோர்டனின் மகள் லியோனி, நீசம் சூப்பர் ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்த போது தன்னுடைய அப்பா மூச்சு விடுவதை நிறுத்தி விட்டதாக தெரிவித்தார். "கடைசி ஓவரின் போது ஒரு நர்ஸ் வந்தார், சூப்பர் ஓவரின் போது அவரின் மூச்சி விடும் விதம் மாறிவருகிறது என்றார்" என லியோனி தெரிவித்தார்.

"ஜிம்மி நீசம் சிக்ஸ் அடித்த போது, இவருக்கு கடைசி மூச்சு நின்றது" என்றார்.

"தேவ் கோர்டன், என்னுடைய உயர்நிலை பள்ளி ஆசிரியர், பயிற்சியாளர் மற்றும் நண்பர். இந்த விளையாட்டி மீது உங்களுக்கு உள்ள ஆர்வர் தீவிரமானது. உங்களுக்கு கீழ் விளையாட நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். அத்தகைய போட்டி வரை நீங்கள் காத்திருந்தீர்கள். நீங்கள் பெருமைப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அனைத்துக்கும் நன்றி. RIP" நீசம் ட்விட் செய்தார்.

கோர்டன், ஐந்து வருடத்துக்கு முன்பு இதய பலவீனமானடைந்தார். இவர் ஆக்லாந்து கிராமரை 25 வருடங்கள் கற்றுக்கொடுத்தார். நிறைய மாணவர்களுடன் ஜிம்மி நீசம் மற்றும் லோக்கி பெர்குசன் இருவரும் பயிற்சி பெற்றனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு உயிரிழந்த ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு உயிரிழந்த ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர்!
"விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்" - குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் அறிவுரை!
"விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்" - குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் அறிவுரை!
"இறுதிப்போட்டி டிக்கெட்டுகளில் லாபம் பார்க்காதீர்கள்" - ஜேம்ஸ் நீஸம் வேண்டுகோள்!
"இறுதிப்போட்டி டிக்கெட்டுகளில் லாபம் பார்க்காதீர்கள்" - ஜேம்ஸ் நீஸம் வேண்டுகோள்!
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
Advertisement