கடைசி இரண்டு ஓருநாள் போட்டி: நியூசிலாந்து அணியில் நீஸம் மற்றும் ஆஷ்லே!

Updated: 29 January 2019 12:34 IST

ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஸம், லெக் ஸ்பின்னர் டோட் ஆஷ்லே ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்

New Zealand Recall Jimmy Neesham, Todd Astle For Last Two ODIs
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் தொடர் ஜனவரி 31 நடைப்பெறுகிறது © Twitter/ICC

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை முதல் மூன்று போட்டிகளில் வென்று கைப்பற்றியது இந்தியா. தொடரை இழந்ததால் கடைசி இரண்டு போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது நியூசிலாந்து நிர்வாகம். ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஸம், லெக் ஸ்பின்னர் டோட் ஆஷ்லே ஆகிய இருவரையும் அணியில் சேர்த்துள்ளனர்.

இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் 23,5,10 என பார்ட்னர்ஷிப் அமைத்து மோசமாக ஆடி வரும் துவக்க வீரர்கள் கப்தில் மற்றும் முன்ரோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ப்ரேஸ்வெல் நீக்கப்பட்டு நீஸமும், சோதி நீக்கப்பட்டு ஆஷ்லேவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஷ்லே, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட கால் முட்டியின் காயத்திலிருந்து விடுபட்டு இப்போது திரும்பியிருப்பது மிடில் ஆர்டருக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காயத்தால் இலங்கை தொடரில் விலகிய நீஸம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுக்குமே பலம் சேர்ப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இவர்கள் வருகை உலகக் கோப்பைக்கு முன் சிறந்த அனுபவமாக இருக்கும் என்று தேர்வுக்குழு கூறியுள்ளது.

நியூசிலாந்து அணி விவரம்: வில்லியம்சன் (கேப்டன்) , டோட் ஆஷ்லே, க்ராண்ட்கோம், பெர்குசன், போல்ட், கப்தில், மேட் ஹென்றி, லாதம், முன்ரோ, நீஸம், நிக்கோலஸ், சாண்ட்னர், சவுத்தி, டெய்லர்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் தொடரில் தோற்றது நியூசிலாந்து
  • மூன்றாவது ஒருநாள் தொடரில் இணைந்தார் ஹர்திக் பாண்ட்யா
  • நான்காவது ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 31 நடைபெறுகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
2019 உலகக் கோப்பை 15 பேர் அணியை அறிவித்தது நியூசிலாந்து!
2019 உலகக் கோப்பை 15 பேர் அணியை அறிவித்தது நியூசிலாந்து!
மசூதி தாக்குதல் அதிர்ச்சிக்கு பின் திருமணம் செய்த பங்களாதேஷ் வீரர்!
மசூதி தாக்குதல் அதிர்ச்சிக்கு பின் திருமணம் செய்த பங்களாதேஷ் வீரர்!
நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள்: வில்லியம்சனுக்கு மூன்று விருதுகள்!
நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள்: வில்லியம்சனுக்கு மூன்று விருதுகள்!
"நியூசிலாந்து மசூதி தாக்குதல் உறைய வைத்தது" - இந்திய கேப்டன் கோலி!
"நியூசிலாந்து மசூதி தாக்குதல் உறைய வைத்தது" - இந்திய கேப்டன் கோலி!
Advertisement