Listen to the latest songs, only on JioSaavn.com
 

கே.எல்.ராகுலுடன் வேடிக்கையான படத்தை வெளியிட்ட ஜிம்மி நீஷம்!

Updated: 12 February 2020 16:50 IST

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பின்னர் கே.எல்.ராகுலுடன் ஒரு வேடிக்கையான படத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார் ஜிம்மி நீஷம்.

Jimmy Neesham Posts Funny Picture With KL Rahul On Twitter, Fans Love It
ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஜிம்மி நீஷம், கே.எல்.ராகுல் ஆகியோர் விளையாடுவார்கள். © Twitter

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. மூன்றாவது போட்டியில் ஐந்து வீக்கெட் வித்தியாத்தில் வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2020 ஐபிஎல் போட்டியில், கே.எல் ராகுல் வழிநடத்தும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடவுள்ள ஜிம்மி நீஷம், 3வது ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அவர்களின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிந்தார். இருப்பினும், நீஷம் அந்தப் புகைப்படத்துக்கு அளித்த தலைப்பு அனைவரையும் கவர்ந்தது. “பேப்பர், சிசர்ஸ், ராக்” (paper, scissors, rock) என்று அவர் தலைப்பிட்டார். அந்தப் புகைப்படத்தில் அவர்களுடன் நடுவரும் இருந்தார். அதை பார்க்கும் போது பிரபலமான விளையாட்டை விளையாடுவது போல் காணப்பட்டது.

மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு கே.எல்.ராகுலின் பேட்டிங்கை பாராட்டிய ஜிம்மி நீசம் அவரை ஏப்ரல் மாதத்துக்கு ரன்கள் சேமிக்கும்படி கூறினார்.நீசம் அவருடைய ட்விட்டில், “ஏப்ரல் மாதத்துக்கு சில ரன்களை சேமித்து வையுங்கள்” என்று கூறினார்.

செவ்வாய்க்கிழமை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரில் தோற்றது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு ஒதுக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. இதில் கே.எல்.ராகுல் தன்னுடைய 4வது சதத்தை நிறைவு செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதமடித்தார். இவர்களுடன் மணீஷ் பாண்டே மற்றும் பிரித்வி ஷா ஆகியோரும் தங்களிடன் பங்களிப்பை வழங்கினர்.

நியூசிலாந்து அணியில், ஹமீஷ் பென்னட் தன்னுடைய 10 ஓவரில் கே.எல்.ராகுல் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

297 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி சிறப்பான தொடக்கத்தை வழங்கியது. முதல் விக்கெட்டுக்கு மார்ட்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கோலின் டி கிராண்டோம் 21 ரன்கள் குவித்து, 17 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்ட ஆட்டத்தை முடித்தார். போட்டி நாயகனாக நிக்கோலஸ் தேர்வு செய்யப்பட்டார். தொடரில் மொத்தமாக 194 ரன்கள் குவித்த ரோஸ் டெய்லர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி 21ம் தேதி தொடங்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ராகுலுடன் ஒரு வேடிக்கையான படத்தை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார் நீஷம்
  • கே.எல்.ராகுல் செவ்வாய்க்கிழமை தனது நான்காவது ஒருநாள் சதத்தை அடித்தார்
  • நியூசிலாந்து இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
தொடர்புடைய கட்டுரைகள்
“நீங்கள் சரியாக மீசை வளர்க்கும் போது” - ஓய்வு குறித்து கேள்விக்கு நியூஸி.வீரரின் பதில்!
“நீங்கள் சரியாக மீசை வளர்க்கும் போது” - ஓய்வு குறித்து கேள்விக்கு நியூஸி.வீரரின் பதில்!
“ஏப்ரல் மாதம் பார்த்துகொள்ளலாம்” - ஜிம்மி நீஷமின் சவாலுக்கு பதிலளித்த கே.எல்.ராகுல்!
“ஏப்ரல் மாதம் பார்த்துகொள்ளலாம்” - ஜிம்மி நீஷமின் சவாலுக்கு பதிலளித்த கே.எல்.ராகுல்!
கே.எல்.ராகுலுடன் வேடிக்கையான படத்தை வெளியிட்ட ஜிம்மி நீஷம்!
கே.எல்.ராகுலுடன் வேடிக்கையான படத்தை வெளியிட்ட ஜிம்மி நீஷம்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு உயிரிழந்த ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு உயிரிழந்த ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர்!
"விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்" - குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் அறிவுரை!
"விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்" - குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் அறிவுரை!
Advertisement