2017ல் அதிக தொகைக்கு ஏலம் போன உனக்டடின் அடிப்படை விலை 1.5 கோடி!

Updated: 12 December 2018 16:35 IST

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள இந்திய வீரர்கள் சஹா, அக்சர் பட்டேல் மற்றும் ஷமி ஆகியோரது அடிப்படை விலையும் ஒரு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Indian Premier League 2019 Auction: Jaydev Unadkat Highest-Priced Indian With Rs 1.5 Crore Base Price
போன சீஸனில் அதிக விலையான 11.5 கோடிக்கு ஏலம் போன உனக்டட் இந்த முறை 1.5 கோடி என்ற‌ அடிப்படை விலையில் நிர்ணயிக்கப்பட்டார். © AFP

இந்தியன் பிரீமியர் லீக் 2019ம் ஆண்டு சீஸனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. சில முக்கியமான வீரர்களின் ஏல விவரம் வெளியாகியுள்ளது. கிரிக் இன்ஃபோ தளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் மேக்ஸ்வெல் மற்றும் பின்ச் ஆகியோர் ஏலத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பைக்கு முன்பான ஆஸ்திரேலியாவின் பயிற்சிக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என்பதால் அவர்களை எலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய வீரர்களில் 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின் யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை 1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள இந்திய வீரர்கள் சஹா, அக்சர் பட்டேல் மற்றும் ஷமி ஆகியோரது அடிப்படை விலையும் ஒரு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

போன சீஸனில் அதிக விலையான 11.5 கோடிக்கு ஏலம் போன உனக்டட் இந்த முறை 1.5 கோடி என்ற‌ அடிப்படை விலையில் நிர்ணயிக்கப்பட்டார்.மேலும் எந்த இந்திய வீரரும் 2 கோடி அடிப்படை விலையில் நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு வீரர்கள் சாம் குரான், கோரி ஆன்டர்சன், மலிங்கா, ஷான் மார்ஷ், மேத்யூஸ், மெக்குலம் மற்றும் வோக்ஸ் ஆகியோர் 2 கோடி அடிப்படை விலையில் நிர்ணயிக்கப்பட்டனர். 

கடந்த புதனுக்கு முன்பாக பிசிசிஐ ஏலத்துக்கு 1000க்கும் அதிகமான பதிவுகளை பெற்றது. அதன் பின் தெரிவித்துள்ள தகவலில் இந்த முறை ஏலத்தில் 1003 வீரர்கள் பங்கு பெறுவார்கள் அவர்களில் 232 பேர் வெளிநாட்டு வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 வீரர்கள் 145.25 கோடி செலவில் ஏலம் எடுக்கப்படவுள்ளனர்.

மேலும் ஏலத்தை இந்த முறை ரிச்சர்ட் மேட்லி நடத்தமாட்டார் என்றும் பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐபிஎல் 2019: அதிகம் ஏலம் போன ஐந்து வீரர்கள்!
ஐபிஎல் 2019: அதிகம் ஏலம் போன ஐந்து வீரர்கள்!
ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சி ஆட்டத்தில் ரஹானே, உனக்டட்
ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சி ஆட்டத்தில் ரஹானே, உனக்டட்
ஆஸ்திரேலிய தொடருக்கு நாளை அணி தேர்வு - உலகக் கோப்பைக்கு முன்னோட்டமா?
ஆஸ்திரேலிய தொடருக்கு நாளை அணி தேர்வு - உலகக் கோப்பைக்கு முன்னோட்டமா?
ஐபிஎல் ஏலம் 2019: யுவராஜுக்கு என்ட்ரி தந்த மும்பை.. அதிக விலைக்கு ஏலம் போன வருண் உனக்டட்!
ஐபிஎல் ஏலம் 2019: யுவராஜுக்கு என்ட்ரி தந்த மும்பை.. அதிக விலைக்கு ஏலம் போன வருண் உனக்டட்!
தோனியுடன் இணைந்து யுவராஜை சிஎஸ்கேவுக்கு ஆடச் சொல்லும் ரசிகர்கள்!
தோனியுடன் இணைந்து யுவராஜை சிஎஸ்கேவுக்கு ஆடச் சொல்லும் ரசிகர்கள்!
Advertisement