இரண்டு நாட்கள் முன்பே ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய பும்ரா?

Updated: 13 August 2019 19:02 IST

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 22ம் தேதி  தொடங்கும் டெஸ்ட் போட்டிகளில் அவர் இணைய உள்ளார். 

Raksha Bandhan 2019: Jasprit Bumrah Celebrates Raksha Bandhan Early Due To "Team India Duties"
பும்ரா 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 2.66 சராசரியுடன் 49 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். © Twitter

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, இந்திய அணியில் இணைய வேண்டிய கட்டாயம் இருந்ததால், ரக்‌ஷாபந்தனை தன் சகோதரி ஜுஹிகாவுடன் இணைந்து இரண்டு நாட்கள் முன்பே கொண்டாடினார். "இந்திய அணி பணி என்றால் நான் ரக்‌ஷாபந்தனுக்கு இங்கு இருக்க மாட்டேன், ஆனால் உன்னுடனான கொண்டாட்டத்தை நான் மிஸ் செய்ய மாட்டேன், ஜுஹிகா. எப்போது எனக்காக இருப்பதற்கு நன்றி," என்று பும்ரா ட்விட்டரில் பதிவிட்டார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 22ம் தேதி  தொடங்கும் டெஸ்ட் போட்டிகளில் அவர் இணைய உள்ளார். 

டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் உலகக் கோப்பை சேம்பியன்ஷிப்பை தொடங்கும் விதமாக, மூன்று நாள் பயிற்சி ஆட்டம் ஆடவுள்ளது. அதில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரிய பிரசிடண்ட் லெவன் அணியை எதிர்த்து ஆகஸ்ட் 17 முதல் 19 வரை ஆடவுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும், ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது. மூன்றாது ஒருநாள் போட்டி புதன்கிழமை நடக்கவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயில் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

25 வயதான பும்ரா சிறப்பாக பந்துவீசி இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதுவரை அவர் 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 2.66 சராசரியுடன் அவர் 49 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

உலகக் கோப்பையில் அதிக வேலைபளு காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் நம்பர் ஒன் என்ற இடத்தை பிடித்த பும்ரா, இந்திய அணி உலகக் கோப்பையில் அரையிறுதி வரை செல்ல உதவினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஃபிட்னஸ் சிலை" - கோலி மற்றும் பும்ராவை புகழ்ந்த யுவராஜ் சிங்!
"ஃபிட்னஸ் சிலை" - கோலி மற்றும் பும்ராவை புகழ்ந்த யுவராஜ் சிங்!
இரண்டு நாட்கள் முன்பே ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய பும்ரா?
இரண்டு நாட்கள் முன்பே ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய பும்ரா?
"போட்டியின் வெற்றியாளர்" மலிங்காவுக்கு ரோஹித் ஷர்மா செய்த ட்விட்!
"போட்டியின் வெற்றியாளர்" மலிங்காவுக்கு ரோஹித் ஷர்மா செய்த ட்விட்!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்: அனைத்து விதமான போட்டிகளுக்கு கோலி தான் கேப்டன்!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்: அனைத்து விதமான போட்டிகளுக்கு கோலி தான் கேப்டன்!
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?
Advertisement