கோலி போல் நடித்து காட்டிய ஜடேஜா...கண்டுபிடித்த ரோகித்...பார்த்து ரசித்த கோலி...! #Viralvideo

Updated: 09 August 2019 16:51 IST

தற்போது வெஸ்ட் இண்டிஸ் சுற்றுபயணம் சென்றுள்ள இந்தியா கிரிக்கெட் அணி, டி20, ஓடிஐ, டெஸ்ட் தொடர்கள் விளையாடுகிறது.

Jadeja impersonates Virat Kohli for Rohit Sharma - all three share a laugh
கோலி - ரோகித் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின

இந்தியா கிரிக்கெட் அணியின் இரு பேட்டிங் தூண்களாக இருக்கிறவர்கள் விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா. இவர்கள் இருவர் இடையே முரண்பட்ட கருத்துகள் இருப்பதாகவும் ‘ஆல் இஸ் நாத் வெல்' என பேச்சு கிளம்பியது.

வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கு செல்லும் முன் இந்தியா கேப்டனான விராத் கோலி மீடியா சந்திப்பில் அணியில் எந்த பிரச்சனை இல்லை என தெரிவித்தார். ரோகித சர்மா இதனை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இன்று ஒரு வீடியோவை இந்தியா கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜாவும் ரோகித் சர்மாவும் ‘ஹெட்ஸ் அப்' (Heads up) என்னும் விளையாட்டை விளையாடுகிறார்கள்.

ரோகித், அட்டையில் ஒரு வீரரின் பெயரை தன் தலையின் மேல் வைத்து காட்ட, ஜடேஜா அவரை போல் நடித்து காட்ட வேண்டும். அதனை ரோகித் கண்டுபிடிக்க வேண்டும்.

முதலில் பும்ராவின் பெயர் அட்டையில் இருந்தது. ஜடேஜா, பும்ரவை போல் பந்துவீச்சி காட்ட, அதனை சரியாக கணித்தார் ரோகித் சர்மா. அதன் பின் வந்த பெயர் விராத் கோலி.

அதனை பார்த்தவுடன் ஜடேஜா வாய்விட்டு சிரித்தார். இதனை சற்று தூரத்தில் இருந்து கோலி பார்த்து கொண்டிருந்தார். பின்பு கொஞ்ச நேரத்திற்கு பின்பு தான் ஜடேஜா நடித்து காட்டும் வீரர் கோலி என கண்டு பிடித்தார் ரோகித்.

கோலி தனது விரலை வைத்து செய்யும் செய்கையை செய்து காட்டினார் ஜடேஜா. இதனை பார்த்து கோலியும் சிரித்தார்.

கோலி – ரோகித் இடையே சண்டை என வெளியாகும் செய்திகள் பொய் என உணர்ந்த்தவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் இந்தியா கிரிக்கெட் இணையதளம்.

தற்போது வெஸ்ட் இண்டிஸ் சுற்றுபயணம் சென்றுள்ள இந்தியா கிரிக்கெட் அணி, டி20, ஓடிஐ, டெஸ்ட் தொடர்கள் விளையாடுகிறது. டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது இந்தியா அணி. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
Advertisement